வானம் பார்த்தே - Vaanam Paarthen Song Lyrics

Lyrics:
நதியென நான் ஓடோடி கடலினில் தினம் தேடினேன்
தனிமையின் வலி தீராதோ
மூச்சுக் காற்று போன பின்பு நான் வாழ்வதோ
தீராத காயம் மனதில் உன்னாலடி ஆறாதடி
வானம் பார்த்தே பழகிய விண்மீன் எங்கோ போக
பாறை நெஞ்சம் கரைகிறதே
ஏனோ இன்று தூரம் போனால்
இடப் பக்கம் துடித்திடும் இருதய இசை என
இருந்தவள் அவள் எங்கு போனாளோ
இரு விழி இமை சேராமல் உறங்கிட மடி கேட்கிறேன்
மழையினை கண் காணாமல்
மேகம் பார்த்து பூமி கேட்க நான் பாடினேன்
நீ இல்லா நானோ நிழலை தேடும் நிஜம் ஆனேனடி
வானம் பார்த்தே பழகிய விண்மீன் எங்கோ போக
பாறை நெஞ்சம் கரைகிறதே
எங்கும் பார்த்தேன் உந்தன் பிம்பம்
கனவிலும் நினைவிலும் தினம் தினம் வருபவள்
எதிரினில் இனி வர நேராதோ
நதியென நான் ஓடோடி கடலினில் தினம் தேடினேன்
தனிமையின் வலி தீராதோ
தூண்டில் முள்ளில் மாட்டிக் கொண்ட மீன் நானடி
ஏமாறும் காலம் இனி வேண்டாமடி கை சேரடி
வானம் பார்த்தே பழகிய விண்மீன் எங்கோ போக
பாறை நெஞ்சம் கரைகிறதே
நதியென நான் ஓடோடி கடலினில் தினம் தேடினேன்
தனிமையின் வலி தீராதோ
மூச்சுக் காற்று போன பின்பு நான் வாழ்வதோ
தீராத காயம் மனதில் உன்னாலடி ஆறாதடி
வானம் பார்த்தே பழகிய விண்மீன் எங்கோ போக
பாறை நெஞ்சம் கரைகிறதே
ஏனோ இன்று தூரம் போனால்
இடப் பக்கம் துடித்திடும் இருதய இசை என
இருந்தவள் அவள் எங்கு போனாளோ
இரு விழி இமை சேராமல் உறங்கிட மடி கேட்கிறேன்
மழையினை கண் காணாமல்
மேகம் பார்த்து பூமி கேட்க நான் பாடினேன்
நீ இல்லா நானோ நிழலை தேடும் நிஜம் ஆனேனடி
வானம் பார்த்தே பழகிய விண்மீன் எங்கோ போக
பாறை நெஞ்சம் கரைகிறதே
எங்கும் பார்த்தேன் உந்தன் பிம்பம்
கனவிலும் நினைவிலும் தினம் தினம் வருபவள்
எதிரினில் இனி வர நேராதோ
நதியென நான் ஓடோடி கடலினில் தினம் தேடினேன்
தனிமையின் வலி தீராதோ
தூண்டில் முள்ளில் மாட்டிக் கொண்ட மீன் நானடி
ஏமாறும் காலம் இனி வேண்டாமடி கை சேரடி
வானம் பார்த்தே பழகிய விண்மீன் எங்கோ போக
பாறை நெஞ்சம் கரைகிறதே
Releted Songs
வானம் பார்த்தே - Vaanam Paarthen Song Lyrics, வானம் பார்த்தே - Vaanam Paarthen Releasing at 11, Sep 2021 from Album / Movie கபாலி - Kabali (2016) Latest Song Lyrics