வாரணம் ஆயிரம் சூழ - Varanamayeram Soozha Valam Sei Song Lyrics

வாரணம் ஆயிரம் சூழ - Varanamayeram Soozha Valam Sei
Artist: Radha Jayalakshmi ,
Album/Movie: அவனா இவன் - Avana Ivan (1962)
Lyrics:
வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து
நாரண நம்பி நடக்கின்றான் என் எதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்
தோரணம் நாட்டக் கனாக் கண்டேன் தோழி நான்..
இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாம் எல்லாம்
வந்திருந்து என்னை மகள் பேசி - மந்திரித்து
மந்திரக் கோடி உடுத்தி மணமாலை
அந்தரி சூட்டக் கனாக் கண்டேன் தோழி நான்....
மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத
முத்துடைத் தாமம் நிரைதாழ்ந்த பந்தற்கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதனன் வந்து என்னை
கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழி நான்....
வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து
நாரண நம்பி நடக்கின்றான் என் எதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்
தோரணம் நாட்டக் கனாக் கண்டேன் தோழி நான்..
இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாம் எல்லாம்
வந்திருந்து என்னை மகள் பேசி - மந்திரித்து
மந்திரக் கோடி உடுத்தி மணமாலை
அந்தரி சூட்டக் கனாக் கண்டேன் தோழி நான்....
மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத
முத்துடைத் தாமம் நிரைதாழ்ந்த பந்தற்கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதனன் வந்து என்னை
கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழி நான்....
Releted Songs
வாரணம் ஆயிரம் சூழ - Varanamayeram Soozha Valam Sei Song Lyrics, வாரணம் ஆயிரம் சூழ - Varanamayeram Soozha Valam Sei Releasing at 11, Sep 2021 from Album / Movie அவனா இவன் - Avana Ivan (1962) Latest Song Lyrics