ஆகாத காலம் - Aagaadha Kaalam Song Lyrics

ஆகாத காலம் - Aagaadha Kaalam

ஆகாத காலம் - Aagaadha Kaalam


Lyrics:
ஆகாத காலம் ஒன்னு அடியோட ஊரக்கொன்னு
பொதைச்சிட்டுப் போயிடுச்சே……
சானேற கீழத்தள்ளும் சதிகார கூட்டம் எங்க
பொனந்திண்ணக் கூடிடுச்சே……
கொடிகாலாக நீண்ட எங்க குடிசையும் கூரையும்
தீஞ்சது தீயாற……… ஓ………
அடி வேராக வாழ்ந்த எங்க தலமுற கோபுரம்
சாஞ்சது யாரால முடிவுல போனோமே தோத்து
வெலங்கலயே இந்த கூத்து (ஆகாத)
ஏ…… வெல்லாம காடு காஞ்சா
ஒரு போகந்தான் பாழாப்போகும்
கண்ணான காடு தீஞ்சா
உயிரெல்லாம் ஊனம் ஆகும்
அன்னாந்து பார்த்தேன் வானம்
மழ சிந்தாம ஏது பூமி
மல்லாந்து போன நீதீ
வெறும் மண்ணாகிப்போச்சே சாமி
தல ஓஞ்சோமே………
அஞ்சாமலே வாழ்ந்தோமே
ஏமாந்துதான் மாஞ்சோமே (ஆகாத)
அப்பாவியான நாங்க அடிப்பட்டோமே நாடே பார்க்க
கொத்தோட நாங்க சாய ஒரு ஆளில்ல கேள்வி கேட்க
முன்னால ஆண்ட கூட்டம்
முகம் இல்லாம மூலி ஆனோம்
வென்னீரு பாஞ்ச வேரா
தெசை எங்கேயும் காணா போனோம்
புலியானோமே……………
அஞ்சாமலே வாழ்ந்தோமே ஏமாந்துதான் மாஞ்சோமே…… (ஆகாத)

ஆகாத காலம் - Aagaadha Kaalam Song Lyrics, ஆகாத காலம் - Aagaadha Kaalam Releasing at 11, Sep 2021 from Album / Movie கடம்பன் - Kadamban (2017) Latest Song Lyrics