ஆனந்தம் ஆனந்தம் - Anandamey Anandam Song Lyrics

ஆனந்தம் ஆனந்தம் - Anandamey Anandam

ஆனந்தம் ஆனந்தம் - Anandamey Anandam


Lyrics:
ஆனந்தம் ஆனந்தம்
ஆனந்தமே ஜீவித பரமார்த்தம்
ஆனந்தம் ஆனந்தம்
ஆனந்தமே ஜீவித பரமார்த்தம்
புன்னகை பூத்திடும் மோகன ராகம்
கோகிலம் பாடிடும் வசந்த கானம்
பூங்காவிலே மல்லியின் கந்தம்
பிரேமையில் மின்னும் மான்விழி அந்தம் (ஆனந்தம்)
தென்றல் காற்றிலே ககனவிகாரம்
ஊஞ்சலின் வீச்சிலே மதுர சஞ்சாரம்
நதி மீதிலே பயண உல்லாசம்
இரு மனம் கலந்திடும் ப்ரணய விலாசம் (ஆனந்தம்)
வெண்மதி நிலவினில் பொங்கும் சமுத்ரம்
கண்ணோடு கண்ணது கலந்திடும் சமயம்
ஈடில்லாத இவ்வாழ்வினில் யோகம்
பிரேம தேவதைக்கிதே வெகு இன்பம்....(ஆனந்தம்)

ஆனந்தம் ஆனந்தம் - Anandamey Anandam Song Lyrics, ஆனந்தம் ஆனந்தம் - Anandamey Anandam Releasing at 11, Sep 2021 from Album / Movie குடும்பம் - Kudumbam (1954) Latest Song Lyrics