அங்கும் இங்கும் - Angum Ingum Song Lyrics

அங்கும் இங்கும் - Angum Ingum

அங்கும் இங்கும் - Angum Ingum


Lyrics:
அங்கும் இங்கும் எங்கும் நிறைந்த
ஆண்டவனே நீ வாராய்
அந்தோ உனது உலகில் நடக்கும்
அலங்கோலம் தனைப் பாராய்
வஞ்சகப் பேயின் ஆட்டம் கண்டுன்
நெஞ்சம் பதறவும் இலையோ
அஞ்சும் சத்திய தேவியின் கண்ணீர்
துடைத்திட மனம் வரவில்லையோ
சஞ்சல ஜகத்தைப் படைத்த உனக்கு
கொஞ்சமும் நாணமே இலையோ (அங்கும்)
உண்மைக்கே திரை போடுது உலகம்
பொய்யே வெளியில் உலாவுது
நன்மை அழிய தீமை வளர
சுயநலமே உலகை ஆளுது
கொடுமை மிகுந்த உலகிதை அழிக்க
கோபமும் வரவே இலையோ.....( அங்கும்)

அங்கும் இங்கும் - Angum Ingum Song Lyrics, அங்கும் இங்கும் - Angum Ingum Releasing at 11, Sep 2021 from Album / Movie அதிசயபப்பெண் - Athisaya Penn (1959) Latest Song Lyrics