சிக்கி முக்கி கல்லு - Chikkimukki Kallu Song Lyrics

சிக்கி முக்கி கல்லு - Chikkimukki Kallu

சிக்கி முக்கி கல்லு - Chikkimukki Kallu


Lyrics:
சிக்கி முக்கி கல்லு
மோதுதே சின்ன சின்ன பொறி
முள்ளுதே சிக்கி முக்கி கல்லு
மோதுதே சின்ன சின்ன பொறி
முள்ளுதே
தீ நீயாக நான் பஞ்சாக
பூ ஒன்று போராடும்
தீயோடு பூவோடு சிற்றின்ப
மாநாடு தேகங்கள் பறி மாறும்
விருந்தொன்று நிகழ்கின்றது
சிக்கி முக்கி கல்லு
மோதுதே சின்ன சின்ன பொறி
முள்ளுதே சிக்கி முக்கி கல்லு
மோதுதே சின்ன சின்ன பொறி
முள்ளுதே முள்ளுதே முள்ளுதே
முள்ளுதே முள்ளுதே
என் பசி அறிந்து பால்
குடத்தை பக்கம் வைத்து போனவர்
யாரோ நம்மை பூவுக்குள்ளே பூட்டி
வைத்து சாவியை தொலைத்தவர்
யாரோ
ஓ முத்த ஈரத்திலே
ஈரத்திலே எரிமலை அணைத்தது
யாரோ உன் உதட்டு வழி
பள்ளங்களில் என் உயிரை
புதைத்தது யாரோ நீ நீ தானா
தேகத்தை இணைத்தது
காவல் துறை மோகத்தை
வளர்த்தது காமன் துறை கை
நான்கும் மெய் ரெண்டும்
பின்னும் வேலை
அப்போது சபதம்
கொண்டேன் இப்போதோ
சலனம் கண்டேன் பெண்
மூச்சு காற்று மோதி மோதி
காடு எரிய கண்டேன்
சிக்கி முக்கி கல்லு
மோதுதே சின்ன சின்ன பொறி
முள்ளுதே சிக்கி முக்கி கல்லு
மோதுதே சின்ன சின்ன பொறி
முள்ளுதே
இந்த பூமிக்குள்ளே
தங்கமுண்டு அதை கருவிகள்
தெரிவிக்க வேண்டும் ஓர்
ஆணுக்குள்ளே சுகங்கள் உண்டு
அதை பெண் வந்து அறிவிக்க
வேண்டும்
வான் மேகங்களை
துடைப்பதற்கு வலி மேவிய
காற்றொன்று வேண்டும் என்
மோகங்களை துடைப்பதற்கு
மீசை முறுக்கிய முத்தம் ஒன்று
வேண்டும் நீ தருவாயா
எத்தனை சுகம் என்று
அறிந்து கொண்டேன் இழந்த
சுகத்துக்கு வருந்துகின்றேன்
சிற்றின்பம் பேரின்பம் ஒன்றே
என்றேன்
செவ்வாயில் முத்து
குளித்தாய் அய்யய்யோ செத்து
பிழைத்தேன் ஆண் சிங்கம் என்றும்
சைவம் அல்ல இங்கே தான் கண்டு
பிடித்தேன்
சிக்கி முக்கி கல்லு
மோதுதே சின்ன சின்ன பொறி
முள்ளுதே சிக்கி முக்கி கல்லு
மோதுதே சின்ன சின்ன பொறி
முள்ளுதே
தீ நீயாக நான் பஞ்சாக
பூ ஒன்று போராடும்
தீயோடு பூவோடு சிற்றின்ப
மாநாடு தேகங்கள் பறி மாறும்
விருந்தொன்று நிகழ்கின்றது
சிக்கி முக்கி கல்லு
மோதுதே மோதுதே மோதுதே
சின்ன சின்ன பொறி முள்ளுதே
சிக்கி முக்கி கல்லு மோதுதே
சின்ன சின்ன பொறி முள்ளுதே

சிக்கி முக்கி கல்லு - Chikkimukki Kallu Song Lyrics, சிக்கி முக்கி கல்லு - Chikkimukki Kallu Releasing at 11, Sep 2021 from Album / Movie சிட்டிசன் - Citizen (2001) Latest Song Lyrics