நினைத்தேன் வந்தாய் - Ninaithen vanthai Song Lyrics

நினைத்தேன் வந்தாய் - Ninaithen vanthai

நினைத்தேன் வந்தாய் - Ninaithen vanthai


Lyrics:
நினைத்தேன் வந்தாய் நூறு வயது
கேட்டேன் தந்தாய் ஆசை மனது
நினைத்தேன் வந்தாய் நூறு வயது
கேட்டேன் தந்தாய் ஆசை மனது
நூறு நிலாவை ஒரு நிலவாக்கி பாவை என்று
ஆயிரம் மலரை ஒரு மலராக்கி பார்வை என்று
கண் மீனாக மானாக நின்றாடவோ
பொன் தேனாக பாலாக பண்பாடவோ
மாலை நேரம் வந்து உறவாடவோ
ஓ ஓ ஓ ஓ ஓ ஓய்யா..
நினைத்தேன் வந்தாய் நூறு வயது
கேட்டேன் தந்தாய் ஆசை மனது
நிலைக்கண்ணாடி கன்னம் கண்டு ஆஹா
மலர்கள்ளூரும் கிண்ணம் என்று ஓஹோ
அது சிந்தாமல் கொள்ளாமல் பக்கம் வா
அன்பு தேனோடை பாய்கின்ற சொர்கம் வா
அது சிந்தாமல் கொள்ளாமல் பக்கம் வா
அன்பு தேனோடை பாய்கின்ற சொர்கம் வா
மன்னன் தோளோடு அள்ளிக் கொஞ்சும் கிள்ளை
அவன் தேரோடு பின்னிச் செல்லும் முல்லை
உன்னை நெஞ்சென்ற மஞ்சத்தில் சந்தித்தேன்
உந்தன் கை கொண்டு உண்ணாத கன்னித்தேன்
உன்னை நெஞ்சென்ற மஞ்சத்தில் சந்தித்தேன்
உந்தன் கை கொண்டு உண்ணாத கன்னித்தேன்
நினைத்தேன் வந்தாய் நூறு வயது
கேட்டேன் தந்தாய் ஆசை மனது
இடை நூலாடி செல்ல செல்ல ஆஹா
அதை மேலாடை மூடிக்கொள்ள ஓஹோ
சின்ன பூமேனி காணாத கண்ணென்ன
சொல்லித் தீராத இன்பங்கள் என்னென்ன
சின்ன பூமேனி காணாத கண்ணென்ன
சொல்லித் தீராத இன்பங்கள் என்னென்ன

நினைத்தேன் வந்தாய் - Ninaithen vanthai Song Lyrics, நினைத்தேன் வந்தாய் - Ninaithen vanthai Releasing at 11, Sep 2021 from Album / Movie காவல்காரன் - Kavalkaran (1967) Latest Song Lyrics