எங்கெங்கே எங்கெங்கே - Engenge Engenge Song Lyrics

எங்கெங்கே எங்கெங்கே - Engenge Engenge

எங்கெங்கே எங்கெங்கே - Engenge Engenge


Lyrics:
எங்கெங்கே எங்கெங்கே எங்கே
இன்பம் உள்ளதென்று தேடிக் கொல்லாதே
ஓ தள்ளிப்போ தள்ளிப்போ இந்தப்
பஞ்சு நெஞ்சம் பத்திக்கொள்ளும் வராதே
நான் ஒரு குமிழி நீ ஒரு காற்று
தொடாதே நீ தொடாதே
நீ ஒரு கிளிதான் நான் உந்தன் கிளைதான்
செல்லாதே தள்ளிச் செல்லாதே
என்னம்மா என்னம்மா உந்தன்
நெஞ்சில் உள்ள வலி என்ன என்னம்மா
என் தூக்கத்தில் என் உதடுகள்
உன் பேர் சொல்லிப் புலம்பும் புலம்பும் ஊரே எழும்பும்
என் கால்களில் பொன் கொலுசுகள்
உன் பேர் சொல்லி ஒலிக்கும் ஒலிக்கும் உயிரை எடுக்கும்
பூப்போல இருந்த மனம் இன்று
மூங்கில்போல் வெடிக்குதடி சகியே சகியே சகியே
இதயம் துடிக்கும் உடலின் வெளியே
எங்கெங்கே எங்கெங்கே எங்கே
இன்பம் உள்ளதென்று தேடிக் கொல்லாதே
என் வீதியில் உன் காலடி
என் ராவெல்லாம் ஒலிக்கும் ஒலிக்கும் இதயம் துடிக்கும்
உன் ஆடையின் பொன்னூலிலே
என் ஜீவனும் துடிக்கும் துடிக்கும் உயிரே வலிக்கும்
நான் உன்னை துரத்தியடிப்பதும்
நீ எந்தன் தூக்கம் பறிப்பதும் சரியா சரியா முறையா
காதல் பிறந்தால் இதுதான் கதியா
எங்கெங்கே எங்கெங்கே எங்கே
இன்பம் உள்ளதென்று தேடிக் கொல்லாதே
ஓ தள்ளிப்போ தள்ளிப்போ இந்தப்
பஞ்சு நெஞ்சம் பத்திக்கொள்ளும் வராதே
நான் ஒரு குமிழி நீ ஒரு காற்று
தொடாதே நீ தொடாதே
நீ ஒரு கிளிதான் நான் உந்தன் கிளைதான்
செல்லாதே தள்ளிச் செல்லாதே
என்னம்மா என்னம்மா உந்தன்
நெஞ்சில் உள்ள வலி என்ன என்னம்மா

எங்கெங்கே எங்கெங்கே - Engenge Engenge Song Lyrics, எங்கெங்கே எங்கெங்கே - Engenge Engenge Releasing at 11, Sep 2021 from Album / Movie நேருக்கு நேர் - Nerukku Ner (1997) Latest Song Lyrics