இனி நாளும் திருநாள்தான் - Ini Naalum Thirunalthan Song Lyrics

இனி நாளும் திருநாள்தான் - Ini Naalum Thirunalthan

இனி நாளும் திருநாள்தான் - Ini Naalum Thirunalthan


Lyrics:
இனி நாளும் திருநாள்தான் அடி ராக்கு ராக்கு
அட சொன்னா மாறாது இவர் வாக்கு வாக்கு
அட அடிக்கிற கை இல்ல இது அணைக்கிற கையுங்கோ
நம் உழைக்கிற சாதிக்கு இது உதவுற கையுங்கோ
ஊரே பாராட்டும் உன் உள்ளம் பூவாய் மலர்ந்திடும் இனி (நாளும்)
பாட்டுக்கொரு பாட்டுப் படி தமிழில் பஞ்சம் கிடையாது
ராகப்படி தாளப்படி படிச்சா பசியே தெரியாது
எட்டு சுதி எட்டும் படி அண்ணன் படிப்பார் கேட்டுக்கோ
ஏலே சரிதான்லே அது சரிதான் தாளம் போட்டுக்கோ
தென்றல் காத்து அடிக்கும்
தேனா பாட்டு படிக்கும் சந்தம் மாறாமே
சந்தனத்துப் பொதிகை பொங்கும் இங்கே
கவிதை நம்மைக் கேட்காது
தெம்மாங்கு பாட்டுப் பாடு
தேராட்டம் ஆட்டம் ஆடு வாடா கண்ணே
ஆட்டத்தில் அசத்திடு அசத்திடு.....இனி (நாளும்)
நெல்லில் பதருண்டு இவர்
சொல்லும் சொல்லில் பதரில்லை
கள்ளம் எதும் இல்லை இவர்
மனசில் கபடம் எதும் இல்லை
பெத்தா ஒரு ஆத்தா அவ
மனசு சுத்தம் வெகு சுத்தம்
பாலைத் தரும் போதே
ஒரு பண்பை தந்தாளே நித்தம்
பாசம் நேசம் விளங்கும்
கோயில் போல குடும்பம் நல்லா வாழணும்
அண்ணன் தம்பி ஒறவு
இன்று போல தொடர்ந்து என்றும் வாழோணும்
ஏஹே ஊரெல்லாம் எங்க சொந்தம்
அன்புக்கு உண்டா பஞ்சம் சொல்லுங்களே
நாமெல்லாம் ஒரு தாய் பிள்ளைகள்
நாளும் திருநாள் தான் அடி ராக்கு ராக்கு

இனி நாளும் திருநாள்தான் - Ini Naalum Thirunalthan Song Lyrics, இனி நாளும் திருநாள்தான் - Ini Naalum Thirunalthan Releasing at 11, Sep 2021 from Album / Movie திருநெல்வேலி - Thirunelveli (2000) Latest Song Lyrics