கடவுளும் காதலும் - Kadavulum Kadhalum Song Lyrics

கடவுளும் காதலும் - Kadavulum Kadhalum

கடவுளும் காதலும் - Kadavulum Kadhalum


Lyrics:
ஆண்: கடவுளும் காதலும் வேறு இல்லை
இதுவரைப் பார்த்தவர் யாருமில்லை
முதன் முதல் இரண்டையும் பார்த்தவன் நான் தானே ஏய் ஏய் ஏய்
பெண்: காமமும் காதலும் வேறு இல்லை
எவருக்கும் இதுவரை தெரியவில்லை
முதன் முதல் இரண்டையும் புரிந்தவள் நான் தானே ஏய் ஏய் ஏய்
குழு: ஓ ஓ ஓ ஓ ஓ....
ஓ ஓ ஓ ஓ ஓ....
ஆண்: தலைகீழ் தெரியுதே வானம்
தலைமேல் உருளுதே பூமி
கலராய் தெரியுதே காற்று
எல்லாம் காதலே (கடவுளும் காதலும்...)
(இசை...)
ஆண்: ஆடைகள் அணிந்து அருவியும் நடந்தால்
உனைப்போல் இருக்கும் என்றுணர்ந்தேன்
பெண்: மீசையும் முளைத்து மின்னலும் நடந்தால்
உனைப்போல் இருக்கும் என்றுணர்ந்தேன்
ஆண்: நீ சிந்திய மௌனத்தை சேர்த்துதான்
இசைக்கிறேன் நான் ஒரு இன்னிசை
பெண்: மீசையின் வன்முறை ரசித்துத்தான்
நான் கூட பார்க்கிறேன் பண்ணிசை
ஆண்: உன் மென்மையை விரும்புதே என் மனம்
போர்க்களம் புகுந்திட வேண்டாம்
பெண்: உன் வன்மையை விரும்புதே பெண்மைதான்
அகிம்சையை வாரிட வேண்டாம்
குழு: ஓ ஓ ஓ ஓ ஓ....
ஓ ஓ ஓ ஓ ஓ....
ஆண்: மெல்லினம் என்பது பெண்மை
வல்லினம் என்பது ஆண்மை
இடையினம் என்பது மென்மை
இதுதான் உண்மையே
(இசை...)
ஆண்: முதல் முறை உனை நான் பார்த்ததில் இருந்து
இதுவரை எனை நான் பார்த்ததில்லை
பெண்: உனைக்கண்ட இரவில் கரைந்ததில் இருந்து
இதுவரை இமைகள் மூடவில்லை
ஆண்: உன் இதழிலும் வர்ணங்கள் தெரியுதே
இது என்ன அதிசயம் சொல்லிடு
பெண்: இரவெல்லாம் பகலாய் தோன்றுதே
இது என்ன ரகசியம் சொல்லிடு
ஆண்: நீ புன்னகை சிந்திடும் நொடிகளில்
நான் சிதறிப்போகிறேன் அள்ளிடு
பெண்: உன் நுனி விரல் தீண்டிடும் நொடிகளில்
பொசுக்கென்று மலர்கிறேன் கிள்ளிடு
குழு: ஓ ஓ ஓ ஓ ஓ....
ஓ ஓ ஓ ஓ ஓ...
ஆண்: அழகிய வன்முறை செய் செய்
அதில் கொஞ்சம் இம்சைகள் வை வை
அதுதான் காதலில் மெய் மெய்
அதில் இல்லை பொய்யடி (கடவுளும் காதலும்...)

கடவுளும் காதலும் - Kadavulum Kadhalum Song Lyrics, கடவுளும் காதலும் - Kadavulum Kadhalum Releasing at 11, Sep 2021 from Album / Movie படிக்காதவன் - Padikathavan (2009) Latest Song Lyrics