காக்கை சிறகினிலே - Kakkai Siraginile Nandalala Song Lyrics

காக்கை சிறகினிலே - Kakkai Siraginile Nandalala

காக்கை சிறகினிலே - Kakkai Siraginile Nandalala


Lyrics:
பெண் : காக்கை சிறகினிலே
நந்தலாலா நீ வந்ததாலா
கன்னம் ரெண்டும் சிவந்ததென்ன
நந்தலாலா முத்தம் தந்ததாலா
ஆண் : ஆஆ பூவாலே மெத்தை விரிச்சு ஹோய்
தேனூறும் முத்தம் தெளிச்சு..ஆஆங்....
நாளாச்சி நாளாச்சி வாங்குது மேல் மூச்சு
காலோடு கால் தேய்ச்சு ஆசையும் சூடாச்சு
ஒண்ணோடு ஒண்ணாக என்னோடு நீயாச்சு
பெண் : காக்கை சிறகினிலே
நந்தலாலா நீ வந்ததாலா
கன்னம் ரெண்டும் சிவந்ததென்ன
நந்தலாலா முத்தம் தந்ததாலா
ஆண் : தூங்கி கிடந்த உள்ளம்
தோகை விரித்துக் கொண்டு
ஏங்கி தவிப்பது இன்று யாராலே
பெண் : தாங்கி பிடிக்கும் எண்ணம்
தாளம் அடிக்கும் வண்ணம்
ஓங்கி வளர்ந்திருந்த பூவாலே
ஆண் : அழகான மங்கை ஒரு அதிகாலை கங்கை
அடி உனக்கே என் இன்பம் மொத்தமே
பெண் : காதோரம் காதோரம் மேலும் கூறு ஆதாரம்
ஆண் : காக்கை சிறகினிலே
நந்தலாலா நான் வந்ததாலா
கன்னம் ரெண்டும் சிவந்ததென்ன
நந்தலாலா முத்தம் தந்ததாலா
பெண் : ஆக்கப் பொறுத்த மனம்
ஆறப் பொறுக்கலையே
மூக்கு சிவப்பதென்ன வீணாக
ஆண் : காந்தம் இழுக்குதடி காதல் வழுக்குதடி
நீந்தி பிடிக்க வந்தேன் நானாக
பெண் : உயிரோடு தஞ்சம் என்
உடல் போடும் மஞ்சும்
நீ தினந்தோறும் முத்து குளிக்க
ஆண் : தாராளம் தாராளம்
தாகம் மனதினில் ஏராளம்
ஆண் : காக்கை சிறகினிலே
நந்தலாலா நான் வந்ததாலா
கன்னம் ரெண்டும் சிவந்ததென்ன
நந்தலாலா முத்தம் தந்ததாலா
பெண் : பூவாலே மெத்தை விரிச்சு ஹோய்
தேனூறும் முத்தம் தெளிச்சு.....
நாளாச்சி நாளாச்சி வாங்குது மேல் மூச்சு
காலோடு கால் தேய்ச்சு ஆசையும் சூடாச்சு
ஒண்ணோடு ஒண்ணாக என்னோடு நீயாச்சு
ஆண் : காக்கை சிறகினிலே நந்தலாலா
பெண் : நீ வந்ததாலா....
கன்னம் ரெண்டும் சிவந்ததென்ன நந்தலாலா
ஆண் : ம்ம்ம்ஹூம்...ஹூம்..ஹூம்...

காக்கை சிறகினிலே - Kakkai Siraginile Nandalala Song Lyrics, காக்கை சிறகினிலே - Kakkai Siraginile Nandalala Releasing at 11, Sep 2021 from Album / Movie புருச லட்சணம் - Purusa Latchanam (1993) Latest Song Lyrics