பொன்மஞ்சள் மஞ்சள் - Lolita Song Lyrics

பொன்மஞ்சள் மஞ்சள் - Lolita

பொன்மஞ்சள் மஞ்சள் - Lolita


Lyrics:
லோலிட்டா ஹா லோலிட்டா
உன் தூரம் கூட பக்கமாக மாறுதே
பொன்மஞ்சள் மஞ்சள் பெண்ணே எங்கே செல்கிறாய்
மின்னஞ்சல் போலே வந்து சென்றுக் கொல்கிறாய்
நீ வேகம் காட்டி போகும்போது நோகுதே
உன் தூரம் கூட பக்கமாக மாறுதே
லோலிட்டா ஹா லோலிட்டா
உன் கரை இல்லாத கண்கள் வெட்டித் தள்ளுதே
உண்மையை சொல்லட்டா
உன் முலாம் பூசாத பேச்சில் எல்லாம் உள்ளதே
பொன்மஞ்சள் மஞ்சள் பெண்ணே எங்கே செல்கிறாய்
மின்னஞ்சல் போலே வந்து சென்றுக் கொல்கிறாய்
நீ வேகம் காட்டி போகும்போது நோகுதே
உன் தூரம் கூட பக்கமாக மாறுதே
லோலிட்டா ஹா லோலிட்டா
உன் தூரம் கூட பக்கமாக மாறுதே
கொட்டும் போதே மழை
கொட்டால் விட்டால் பிழை
வாய்சே வானம் மாற்றி பார்க்கிறாய்
பெண்கள் எல்லாம் செடி
பற்றிக் கொள்ளும் கொடி
என்றே தப்பு தப்பாய்ச் சொல்கிறாய்
நான் நாற்பக்கம் நீர் சூழ்ந்த தீவல்லவா
யார் வந்தாலும் சாய்கின்ற தேர் அல்லவா
நான் அலை தூர அடை காக்கும் கடல் அல்லவா
என் ஆகாய அதில்கூட பல வெண்ணிலா
மஞ்சள் மஞ்சள் பெண்ணே எங்கே செல்கிறாய்
மின்னஞ்சல் போலே வந்துசென்றுக் கொல்கிறாய்
நீ வேகம் காட்டி போகும்போது நோகுதே
உன் தூரம் கூட பக்கமாக மாறுதே
லோலிடா ஹா லோலிடா
உன் தூரம் கூட பக்கமாக மாறுதே
தானாய் வந்தால் ருசி
தள்ளிச் சென்றால் ரசி
என்னும் வாழ்க்கை இன்பம் அல்லவா
முத்தம் என்றால் சிரி
கட்டி கொண்டால் நெறி
கண்ணை மூடி கொண்டு கிள்ளவா
நீ சொல்லும் பல நூறில் நானில்லையே
உன் அழகான பல பூவில் தேன் இல்லையே
உன் வெள்ளத்தில் நான் ஒன்றும் துரும்பில்லையே
நீ ருசி பார்க்க தலை தாழ்த்தும் கரும்பில்லையே
ஓ லோலிட்டா ஹா லோலிட்டா
உன் தூரம் கூட பக்கமாக மாறுதே

பொன்மஞ்சள் மஞ்சள் - Lolita Song Lyrics, பொன்மஞ்சள் மஞ்சள் - Lolita Releasing at 11, Sep 2021 from Album / Movie எங்கேயும் காதல் - Engeyum Kaadhal (2011) Latest Song Lyrics