மடை திறந்து தாவும் நதியலை நான் - Madai Thiranthu Song Lyrics

மடை திறந்து தாவும் நதியலை நான் - Madai Thiranthu

மடை திறந்து தாவும் நதியலை நான் - Madai Thiranthu


Lyrics:
மடை திறந்து தாவும் நதியலை நான்
மனம் திறந்து கூவும் சிறு குயில் நான்
இசை கலைஞன் என் ஆசைகள் ஆயிரம்
நினைத்தது பலித்தது ஹோ…
லலலலலால…………
………………………….
காலம் கனிந்தது கதவுகள் திறந்தது
ஞானம் விளைந்தது நல்லிசை பிறந்தது
புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே
புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே
விரலிலும் குரலிலும் ஸ்வரங்களின் நாட்டியம்
அமைத்தேன் நான்
மடை திறந்து தாவும் நதியலை நான்
மனம் திறந்து கூவும் சிறு குயில் நான்
இசை கலைஞன் என் ஆசைகள் ஆயிரம்
நினைத்தது பலித்தது ஹோ…
……………………..
நேற்றென் அரங்கிலே நிழல்களின் நாடகம்
இன்றென் எதிரிலே நிஜங்களின் தரிசனம்
வருங்காலம் வசந்த காலம் நாளும் மங்கலம்
வருங்காலம் வசந்த காலம் நாளும் மங்கலம்
இசைக்கென இசைகின்ற ரசிகர்கள் ராஜ்ஜியம்
எனக்கே தான்…
மடை திறந்து தாவும் நதியலை நான்
மனம் திறந்து கூவும் சிறு குயில் நான்
இசை கலைஞன் என் ஆசைகள் ஆயிரம்
நினைத்தது பலித்தது ஹோ…
லலலலலால…………

மடை திறந்து தாவும் நதியலை நான் - Madai Thiranthu Song Lyrics, மடை திறந்து தாவும் நதியலை நான் - Madai Thiranthu Releasing at 11, Sep 2021 from Album / Movie நிழல்கள் - Nizhalgal (1980) Latest Song Lyrics