மணமகனின் சத்தியம் - Manamaganin Sathiyam Song Lyrics

மணமகனின் சத்தியம் - Manamaganin Sathiyam

மணமகனின் சத்தியம் - Manamaganin Sathiyam


Lyrics:
கண்ணே கனியே உன்னை கை விடமாட்டேன்
சத்தியம் சத்தியம் இது சத்தியமே
மாலை சூடிய காலை கதிரின் மேலே
சத்தியம் சத்தியம் இது சத்தியமே
ஒரு குழந்தை போலே ஒரு வைரம் போலே
தூய்மையான என் சத்தியம் புனிதமானது
இப்பிறவியில் இன்னொரு பெண்ணை சிந்தையிலும் தொடேன்
பிறிதோர் பக்கம் மனம் சாயா பிரியம் காப்பேன்
செல்ல கொலுசின் சிணுங்கல் அறிந்து சேவை செய்வேன்
நெற்றி பொட்டில் முத்தம் பதித்து நித்தம் எழுவேன்
கை பொருள் யாவும் கரைந்தாலும் கணக்கு கேளேன்
ஒவ்வொரு வாதம் முடியும் போதும் உன்னிடம் தோற்பேன்
கண்ணே கனியே உன்னை கை விடமாட்டேன்
சத்தியம் சத்தியம் இது சத்தியமே
மாலை சூடிய காலை கதிரின் மேலே
சத்தியம் சத்தியம் இது சத்தியமே
அர்த்த ஜாம திருடன் போல
அதிர்ந்து பேசேன்
காமம் தீரும் பொழுதிலும்
எந்தன் காதல் தீரேன்
மாத மலர்ச்சி மறையும் வயதில்
மார்பு கொடுப்பேன்
நோய் மடியோடு நீ வீழ்ந்தால்
தாய் மடியாவேன்
சுவாசம் போல அருகில் இருந்து
சுகப்பட வைப்பேன்
உந்தன் உறவை எந்தன் உறவாய்
நெஞ்சில் சுமப்பேன்
உன் கனவுகள் நிஜமாக
என்னையே தருவேன்
உன் வாழ்வு மண்ணில் நீள
என் உயிர் தருவேன்
கண்ணே கனியே உன்னை கை விடமாட்டேன்
சத்தியம் சத்தியம் இது சத்தியமே
மாலை சூடிய காலை கதிரின் மேலே
சத்தியம் சத்தியம் இது சத்தியமே

மணமகனின் சத்தியம் - Manamaganin Sathiyam Song Lyrics, மணமகனின் சத்தியம் - Manamaganin Sathiyam Releasing at 11, Sep 2021 from Album / Movie கோச்சடையான் - Kochadaiyaan (2014) Latest Song Lyrics