நான் பிழைப்பேனோ - Naan Pizhaippeno Song Lyrics

நான் பிழைப்பேனோ - Naan Pizhaippeno

நான் பிழைப்பேனோ - Naan Pizhaippeno


Lyrics:
மாமு பொழுது போகல
பாடம் பிடிக்கல
கண்ணில் பசுமை காணல
காற்று கூட அடிக்கல
ஒரு தாமரை நீரினில் இல்லாமல்
இங்கே ஏன் இரு மேகலை பாதங்கள்
மண் மீது புண்ணாவதேன்
ஓர் ஓவியம் காகிதம்
கொள்ளாமல் இங்கே ஏன்
அதன் ஆயிரம் ஆயிரம்
வண்ணங்கள் பெண்ணாவதேன்
நான் பிழைப்பேனோ மூச்சு வாங்குதே 
நூறையும் தாண்டி காய்ச்சல் ஏறுதே
ஞாபகம் எல்லாம் பாவை ஆகுதே
நாடகம் போலே நாட்கள் போகுதே
ஆயிரம் பூக்கள் தூவ தோணுதே
தோன்றிடும்போதே பாவம் தீருதே
காரிகையாலே காற்றும் மாறுதே
வானிலை வெப்பம் தோற்றுப் போகுதே
காலை விழிப்பு வந்ததும்
கண்ணில் அவள் முகம்
என்னை புதிய ஒருவனாய் செய்யும்
செய்யும் அறிமுகம்
இதுநாள் வரை நாள் வரை இல்லாத
பூந்தோட்டம் திடு திப்பென திப்பென
எங்கெங்கும் ஏன் வந்தது
உன்னை பார்ப்பது நிச்சயம் 
என்றான அன்றாடம்
என்னை சில்லிட வைத்திடும்
பூகம்பம் தான் தந்தது
நான் பிழைப்பேனோ மூச்சு வாங்குதே 
நூறையும் தாண்டி காய்ச்சல் ஏறுதே
ஞாபகம் எல்லாம் பாவை ஆகுதே 
நாடகம் போலே நாட்கள் போகுதே
ஏன் உன்னை பார்த்தால் பூர்வ ஞாபகம் 
ஏழெட்டு நுாலாய் வந்து போகணும்
வீட்டுக்கு போனால் அங்கும் உன்முகம்
வீம்புடன் வந்து வீழ்த்தி பார்க்கணும்
வெண்ணிலா தூரத்து பார்வைகள் போதாதே
அதை என்னிடம் வா என்று சொன்னாலும் வாராதே
நான்கைந்து வார்த்தைகள் 
நான் சேர்க்கிறேன் வைரக்கல்
போல ஒவ்வொன்றும்
நான் கோர்க்கிறேன்
ஏதேனும் பேசாமல் 
தீராதினி 
உறையும் பனி

நான் பிழைப்பேனோ - Naan Pizhaippeno Song Lyrics, நான் பிழைப்பேனோ - Naan Pizhaippeno Releasing at 11, Sep 2021 from Album / Movie எனை நோக்கி பாயும் தோட்டா - Enai Noki Paayum Thota (2019) Latest Song Lyrics