ஒளி தரும் சூரியனும் நானில்லை - Oli Tharum Sooriyanum Song Lyrics

ஒளி தரும் சூரியனும் நானில்லை - Oli Tharum Sooriyanum

ஒளி தரும் சூரியனும் நானில்லை - Oli Tharum Sooriyanum

Artist: Unknown

Album/Movie: வால்மிகி - Valmiki (2009)


Lyrics:
மனதில் உறுதி வேண்டும்
வாக்கினிலே இனிமை வேண்டும்
நினைவு நல்லது வேண்டும்
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்
ஒளி தரும் சூரியனும் நானில்லை
இரவினில் வான் வரும் நிலவும் இல்லை
விலகாத இருளினையும்
விலக்கி வைக்கும் விளக்கானேன்
அது போதும் அது போதும்
உன் விடியலுக்கோர் கிழக்கானேன்
என்னை மாற்ற ஏன் எண்ணினாய்
இங்கு என்னை ஏமாற்றி வாழ்ந்தவன்
கல்லைக் கூட நீ கனிய வைக்கிறாய்
முல்லைப் பூவென மாற்றினாய்
மாறிப் போகின்ற உலகிலே
என்றும் அன்பு மாறாது சொல்லலாம்
ஒன்றும் இல்லாது ஓய்ந்து நின்றாலும்
ஊக்கத்தை அன்பில் ஊட்டலாம்
எத்தனை உள்ளம் நோக
என்னென்ன செய்தவன்
சத்தியம் செய்தே சொல்வேன்
இன்று தான் மனிதனே
திருந்திய பின்னே வருந்துவதேனோ
வருவது வசந்தங்களே
வண்ணப் பூப்பூத்து வாசம் எங்கெங்கும்
வந்து சூழ்கின்ற நாள் இது
கோயில் மணியோசை தென்றல் காற்றோடு
காதில் தேன் பாயும் நாள் இது
கொஞ்சும் கிளி போல கோலக் குயில் போல
பிஞ்சு மனசாகிப் போகுது
கங்கை நதி போல பொங்கும் அலை போல
உள்ளம் ஒன்றாகிச் சேர்ந்தது
இன்று போல் என்றும் என்றும் நல்லதே செய்யலாம்
உள்ளதே போதும் என்று நிம்மதி கொள்ளலாம்
ஒரு வழி அடைத்தால் மறு வழி திறக்கும்
அதிசயம் அதிசயமே.........(ஒளி தரும்)

ஒளி தரும் சூரியனும் நானில்லை - Oli Tharum Sooriyanum Song Lyrics, ஒளி தரும் சூரியனும் நானில்லை - Oli Tharum Sooriyanum Releasing at 11, Sep 2021 from Album / Movie வால்மிகி - Valmiki (2009) Latest Song Lyrics