பாசமென்னும் நூலெடுத்து வாசமுள்ள - Pasamennum Nooleduththu Song Lyrics

பாசமென்னும் நூலெடுத்து வாசமுள்ள - Pasamennum Nooleduththu

பாசமென்னும் நூலெடுத்து வாசமுள்ள - Pasamennum Nooleduththu


Lyrics:
பாசமென்னும் நூலெடுத்து வாசமுள்ள பூத்தொடுத்து
நான் ஒரு படம் எடுத்தோங்க
பாசமென்னும் நூலெடுத்து வாசமுள்ள பூத்தொடுத்து
நான் ஒரு படம் எடுத்தோங்க
பொது மக்களே பாத்துப்புட்டு வாழ்த்து சொல்லுங்க
ஆயிரம் உண்டு நட்சத்திரம் தாங்க
ஆனதுக்கெல்லாம் காரணம் நீங்க
ஆடையைத்தான் உரிஞ்சு பொண்ண
ஓடவிட்டு பாக்குற ஆபாசம் இதுல இல்ல
நாங்க தாய்க்குலத்த ஆதரிக்க வந்த புள்ள
ஆபாசம் இதுல இல்ல நாங்க
தாய்க்குலத்த ஆதரிக்க வந்த புள்ள....
கன்னிமலர் ஒன்று கற்புடனே வாழ
சின்ன சின்ன குருவிங்க பின்னி வெச்ச கூடு
மண்ணோட வாசத்த பொண்ணோட மானத்த
கண்ணாக மதிப்பது நம்ம தமிழ்நாடு
பாசத்தில் மெழுகா உருகிடும் பொம்பள
பாதிக்க நேர்ந்தால் முடிவோ வம்புல
புத்துக்குள்ள பாம்பிருந்தா குத்தமில்ல அது
புத்திக்குள்ள இருந்தா சுத்தமில்ல
பாசமென்னும் நூலெடுத்து
வாசமுள்ள பூத்தொடுத்து
நான் ஒரு படம் எடுத்தோங்க
பொது மக்களே பாத்துப்புட்டு வாழ்த்து சொல்லுங்க
பாண்டவர் போர் முடிக்க பாஞ்சாலி தலை முடிக்க
பாத்திருக்கோம் அந்தக் கத பாரதக் கத
பாலுக்கு காவலென்னும் பகல் வேஷ பூனைக்கெல்லாம்
பாடத்த சொல்லுமிது பாமரக் கத
பூமியும் பொண்ணும் பொறுமையின் வடிவம்
பூகம்பமானால் உலகே மடியும்
சத்தியத்த சோதிக்காதிங்க ஜனங்க முன்ன
தப்பா வழி நீடிக்காதுங்க
எங்களுக்கு தேவ உங்களோட ஓட்டு
டிக்கெட்டு கவுண்டர நெறைக்கணும் நோட்டு
பாசமென்னும் நூலெடுத்து
வாசமுள்ள பூத்தொடுத்து
நான் ஒரு படம் எடுத்தோங்க
பொது மக்களே பாத்துப்புட்டு வாழ்த்து சொல்லுங்க
ஆயிரம் உண்டு நட்சத்திரம் தாங்க
ஆனதுக்கெல்லாம் காரணம் நீங்க
ஆடையைத்தான் உரிஞ்சு பொண்ண
ஓடவிட்டு பாக்குற ஆபாசம் இதுல இல்ல
நாங்க தாய்க்குலத்த ஆதரிக்க வந்த புள்ள
ஆபாசம் இதுல இல்ல நாங்க
தாய்க்குலத்த ஆதரிக்க வந்த புள்ள....
ஆபாசம் இதுல இல்ல நாங்க
தாய்க்குலத்த ஆதரிக்க வந்த புள்ள

பாசமென்னும் நூலெடுத்து வாசமுள்ள - Pasamennum Nooleduththu Song Lyrics, பாசமென்னும் நூலெடுத்து வாசமுள்ள - Pasamennum Nooleduththu Releasing at 11, Sep 2021 from Album / Movie விழியோர கவிதை - Vizhiyora Kavithai (1988) Latest Song Lyrics