பசி பசி பரம ஏழைகளின் - Pasi Pasi pasi Parama Song Lyrics

பசி பசி பரம ஏழைகளின் - Pasi Pasi pasi Parama

பசி பசி பரம ஏழைகளின் - Pasi Pasi pasi Parama


Lyrics:
தீராத வினைகளைத் தீர்ப்பவன் கையிலும்
திருவோடு தந்த பசியே.....
திட்டாமல் வையாமல் அடிக்காமல் உதைக்காமல்
சித்ரவதை செய்யும் பசியே
தாராளமாகவே ஜான் வயிற்றில் புகுந்து
தகடு தத்தம் போடும் பசியே
நல்ல தங்காளையும் ஏழு பிள்ளைகளையும் கொன்ற
பெருந்தன்மையான பசியே......!
பசி பசி பசி பசி
பரம ஏழைகளின் உயிரை வாங்கவே
பாரினிலே அவதாரமே செய்த
பசி பசி பசி பசி
கொள்ளையும் புல்லையும் திங்க வைக்கிறாய்
கொள்ளையடிக்கவே வழியும் காட்டுறாய்
பல்லைக்காட்டி பிச்சைக் கேட்கச் செய்கிறாய்
பஞ்ச காலத்திலே கொஞ்சி விளையாடும் (பசி பசி)
விஞ்ஞானிக் கென்னாளும் சிந்தனைப் பசி
வேதாந்திக் கெப்போதும் ஞானப் பசி
பெண்ணாசைக் காரனுக்கு காதல் பசி பெரும்
கஞ்சனுக்கும் லஞ்சனுக்கும் செத்தாலும் பணப் பசி
எங்குப் பார்த்தாலும் பசி பசி
யாரைப் பார்த்தாலும் பசி பசி....
பசி பசி பசி பசி
பரம ஏழைகளின் உயிரை வாங்கவே
பாரினிலே அவதாரமே செய்த
பசி பசி பசி பசி

பசி பசி பரம ஏழைகளின் - Pasi Pasi pasi Parama Song Lyrics, பசி பசி பரம ஏழைகளின் - Pasi Pasi pasi Parama Releasing at 11, Sep 2021 from Album / Movie கதாயாயகி - Kathanayaki (1955) (1955) Latest Song Lyrics