சூரியனே இளம் - Sooriyane Ilam Song Lyrics

சூரியனே இளம் - Sooriyane Ilam

சூரியனே இளம் - Sooriyane Ilam


Lyrics:
சூரியனே இளம் சூரியனே
உன்னை தேடுது பார் இந்த தாமரையே
எந்தன் வானகமே உயர் வானகமே
இங்கு வாடுது பார் உந்தன் வான்நிலவே நீ வா
காதலனே உனை காதலித்தேன்
உன் கண்ணசைந்தால் நான் கையனைப்பேன்
நீ வாய் திறந்தால் நான் வாழ்ந்திருப்பேன்
இல்லை தீக்குளித்து உயிர் நீத்திருப்பேன் நீ வா
உன் பேரை ஒவ்வொரு நாளும் வேதமென ஓதுகிறேன்
உன் மேலே காதலை வைக்க
பூமேலே மெத்தை விரித்தேன் பூவுடம்பு நோகிறதே
உன்னாலே தூக்கம் இழந்து
தினந்தோறும் புண்ணாகும் தேகம்
ஒருபோதும் விலகாது மோகம் வா
சூரியனே இளம் சூரியனே
உன்னை தேடுது பார் இந்த தாமரையே
எந்தன் வானகமே உயர் வானகமே
இங்கு வாடுது பார் உந்தன் வான்நிலவே நீ வா
சின்ன சின்ன இதழ் திண்ண திண்ண விழி மின்ன மின்ன வரும் அன்னம்
உன்னை மட்டும் உயிர் உள்ளமட்டும் தினம் உச்சரிக்கும் இவள் உள்ளம்
உன்னையன்றி ஒரு சொந்தமில்லை என என்னிடத்தில் மனம் சொல்லும்
உன்னை தொட்டு வரும் பெண்ணை கட்டு இல்லை என்னை விட்டு உயிர் செல்லும்
உன்னுயிராய் நான் இருப்பேன்
என்னுயிரே வந்துவிடு
உனக்காக தானே இந்த மானே
பூமியில் நான் பிறந்தேனே வா
ஆசை கொண்டு உந்தன் பொன்முகத்தை நெஞ்சில் அச்சடித்து வைத்த பாவை
உன்னை என்னை ஒரு சோறு தண்ணி இன்றி உள்ளம் வாடும் இந்த தோகை
வாழும் ஜென்மம் இது தீர்ந்த பின்னும் இன்னும் ஏழு ஜென்மம் வரக்கூடும்
வந்தபோதும் விட்டு நீங்கிடாது இந்த வண்ண மாது உறவாடும்
இன்னமும் ஏன் வாட்டுகின்றாய்
மனதினில் தீ மூட்டுகின்றாய்
நான் வரும் போது ஏனோ
வாசலை பூட்டுகின்றாய் வா
சூரியனே இளம் சூரியனே
உன்னை தேடுது பார் இந்த தாமரையே
எந்தன் வானகமே உயர் வானகமே
இங்கு வாடுது பார் உந்தன் வான்நிலவே நீ வா
உன் பேரை ஒவ்வொரு நாளும் வேதமென ஓதுகிறேன்
உன் மேலே காதலை வைக்க
பூமேலே மெத்தை விரித்தேன் பூவுடம்பு நோகிறதே
உன்னாலே தூக்கம் இழந்து
தினந்தோறும் புண்ணாகும் தேகம்
ஒருபோதும் விலகாது மோகம் வா வா… வா…
சூரியனே இளம் சூரியனே
உன்னை தேடுது பார் இந்த தாமரையே
எந்தன் வானகமே உயர் வானகமே
இங்கு வாடுது பார் உந்தன் வான்நிலவே நீ வா

சூரியனே இளம் - Sooriyane Ilam Song Lyrics, சூரியனே இளம் - Sooriyane Ilam Releasing at 11, Sep 2021 from Album / Movie மாண்புமிகு மாணவன் - Maanbumigu Maanavan (1996) Latest Song Lyrics