சொர்க்கத்தின் வாசற்படி - Sorgathin Vasapadi Song Lyrics

சொர்க்கத்தின் வாசற்படி - Sorgathin Vasapadi

சொர்க்கத்தின் வாசற்படி - Sorgathin Vasapadi


Lyrics:
ஆண் : சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
பெண்ணல்ல நீயெனக்கு வண்ணக் களஞ்சியமே
சின்னமலர்க் கொடியே நெஞ்சில் சிந்தும் பனித்துளியே
பெண் : சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
ஆண் : உன்னாலே உண்டாகும் ஞாபகங்கள்
ஒன்றிரண்டு அல்லவே
பெண் : ஒன்றுக்குள் ஒன்றான நீரலைகள்
என்றும் இரண்டல்லவே
ஆண் : சிற்றன்னவாசலின் ஓவியமே
சிந்தைக்குள் ஊறிய காவியமே
பெண் : எங்கே நீ அங்கேதான் நானிருப்பேன்
எப்போதும் நீயாடத் தோள் கொடுப்பேன்
ஆண் : மோகத்தில் நான் படிக்கும் மாணிக்க வாசகமே
நான் சொல்லும் பாடலெல்லாம் நீ தந்த யாசகமே
பெண் : சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
பெண்ணல்ல நான் உனக்கு வண்ணக் களஞ்சியமே
சிந்தும் பனித்துளியே என்னைச் சேரும் இளங்கிளியே
ஆண் : சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
பெண் : உன்னாலே நான் கொண்ட காயங்களை முன்னும் பின்னும் அறிவேன்
ஆண் : கண்ணாலே நீ செய்யும் மாயங்களை இன்றும் என்றும் அறிவேன்
பெண் : மின்சாரம் போலெனைத் தாக்குகிறாய்
மஞ்சத்தைப் போர்க்களம் ஆக்குகிறாய்
ஆண் : கண்ணே உன் கண்ணென்ன வேலினமோ
கை தொட்டால் மெய் தொட்டால் மீட்டிடுமோ
பெண் : கோட்டைக்குள் நீ புகுந்து வேட்டைகள் ஆடுகிறாய்
நானிங்கு தோற்றுவிட்டேன் நீயென்னை ஆளுகிறாய்
ஆண் : சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
பெண் : சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
ஆண் : பெண்ணல்ல நீயெனக்கு வண்ணக் களஞ்சியமே
பெண் : சிந்தும் பனித்துளியே என்னைச் சேரும் இளங்கிளியே
ஆண் : சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
பெண் : சொர்க்கத்தின் வாசற்படி

Releted Songs

சொர்க்கத்தின் வாசற்படி - Sorgathin Vasapadi Song Lyrics, சொர்க்கத்தின் வாசற்படி - Sorgathin Vasapadi Releasing at 11, Sep 2021 from Album / Movie உன்னைச் சொல்லிக் குற்றமில்லை - Unnai Solli Kutramillai (1990) Latest Song Lyrics