தங்கத்தில் முகமெடுத்து - Thangathil Mugameduthu Song Lyrics

தங்கத்தில் முகமெடுத்து - Thangathil Mugameduthu

தங்கத்தில் முகமெடுத்து - Thangathil Mugameduthu


Lyrics:
தங்கத்தில் முகமெடுத்து,
சந்தனத்தில் உடலெடுத்து
மங்கை என்று வந்திருக்கும் மலரோ
நீ மாலை நேர பொன் மஞ்சள் நிலவோ
தங்கத்தில் முகமெடுத்து
சந்தனத்தில் உடலெடுத்து
காமன் போல வந்திருக்கும் வடிவோ
அந்த தேவ லோக மன்னவனும் நீயோ
முல்லை மலர் செண்டுகள் கொண்டு கொடி ஆடுது
தென்றல் சதிராடினால் அந்த இடை தாங்குமா?
இந்த இடை தாங்கவே கைகள் இருக்கின்றது
கொஞ்சி உறவாட மலர் மஞ்சம் அழைக்கின்றது
மலர்ந்து கனிந்து சிரித்து குலுங்கும் கனியாகவோ
தங்கத்தில் முகமெடுத்து,
சந்தனத்தில் உடலெடுத்து
மங்கை என்று வந்திருக்கும் மலரோ
நீ மாலை நேர பொன் மஞ்சள் நிலவோ
எந்தன் மனக்கோயிலில் தெய்வம் உனை காண்கிறேன்
உந்தன் நிழல் போலவே வரும் வரம் கேட்கின்றேன்
இந்த மனராஜியம் என்றும் உனக்காகவே
சொந்த மகராணி நீ என்று நான் சொல்லுவேன்
நினைக்க இனிக்க கொடுத்து மகிழ்ந்த முத்தாரமே
தங்கத்தில் முகமெடுத்து,
சந்தனத்தில் உடலெடுத்து
மங்கை என்று வந்திருக்கும் மலரோ
நீ மாலை நேர பொன் மஞ்சள் நிலவோ

தங்கத்தில் முகமெடுத்து - Thangathil Mugameduthu Song Lyrics, தங்கத்தில் முகமெடுத்து - Thangathil Mugameduthu Releasing at 11, Sep 2021 from Album / Movie மீனவ நண்பன் - Meenava Nanban (1977) Latest Song Lyrics