வரம் தரும் வடிவேலன் - Varam Tharum Vadivelan Song Lyrics

வரம் தரும் வடிவேலன் - Varam Tharum Vadivelan

வரம் தரும் வடிவேலன் - Varam Tharum Vadivelan


Lyrics:
ஆண் : வரம் தரும் வடிவேலன்
வாழ வைக்கும் தெய்வம் அவன்
வரம் தரும் வடிவேலன்
வாழ வைக்கும் தெய்வம் அவன்
உமை பெற்ற மைந்தன் இந்த
உலகை ஆளும் வேந்தனவன்
உமை பெற்ற மைந்தன் இந்த
உலகை ஆளும் வேந்தனவன்
பெண் : வரம் தரும் வடிவேலன்
வாழ வைக்கும் தெய்வம் அவன்
உமை பெற்ற மைந்தன் இந்த
உலகை ஆளும் வேந்தனவன்..
ஆஆஆ...வடிவேலா வடிவேலா
வரம் தரும் வடிவேலா வடிவேலா....
ஆண் : சிரித்த முகத்துடனே சிவன்
அளித்த வரத்துடனே
திருச்செந்தூர் வீற்றிருக்கும்
எங்கள் சிங்கார வடிவேலன்
பெண் : சிரித்த முகத்துடனே சிவன்
அளித்த வரத்துடனே
திருச்செந்தூர் வீற்றிருக்கும்
எங்கள் சிங்கார வடிவேலன்
ஆண் : தோடுயர்ந்த மலையிலெல்லாம்
சேவல் கொடி பறக்க
பெண் : வேலெடுத்து நீயிருப்பாய்
ஆறுபடை சிறக்க
ஆண் : மலையேறி மயிலேறி எனை நாடி
ஓடோடி வருவானே வடிவேலனே
பெண் : வரம் தரும் வடிவேலன்
வாழ வைக்கும் தெய்வம் அவன்
உமை பெற்ற மைந்தன் இந்த
உலகை ஆளும் வேந்தனவன்..
பெண் : அருளும் கரத்துடனே
இருள் விளக்கும் திறத்துடனே
பிரணவத்தில் நிலைத்திருக்கும்
எங்கள் சிங்கார வடிவேலன்
ஆண் : அருளும் கரத்துடனே
இருள் விளக்கும் திறத்துடனே
பிரணவத்தில் நிலைத்திருக்கும்
எங்கள் சிங்கார வடிவேலன்
பெண் : விண்ணுயர்ந்த உலகிலெல்லாம்
தேவர்களும் வணங்க
ஆண் : அடியெடுத்து நீ கொடுத்தாய்
திருப்புகழும் மணக்க
பெண் : ஒளியாகி வெளியாகி அமுதாகி
தமிழாகி வருவானே வடிவேலனே...
ஆண் : வரம் தரும் வடிவேலன்
வாழ வைக்கும் தெய்வம் அவன்
பெண் : வரம் தரும் வடிவேலன்
வாழ வைக்கும் தெய்வம் அவன்
ஆண் : உமை பெற்ற மைந்தன் இந்த
உலகை ஆளும் வேந்தனவன்..
பெண் : உமை பெற்ற மைந்தன் இந்த
உலகை ஆளும் வேந்தனவன்..

வரம் தரும் வடிவேலன் - Varam Tharum Vadivelan Song Lyrics, வரம் தரும் வடிவேலன் - Varam Tharum Vadivelan Releasing at 11, Sep 2021 from Album / Movie வரம் தரும் வேலவன் - Varam Tharum Vadivelan (2021) Latest Song Lyrics