விண்ணிலே தவழும் மதி - Vinnile Thavazhum Madhi Song Lyrics

விண்ணிலே தவழும் மதி - Vinnile Thavazhum Madhi

விண்ணிலே தவழும் மதி - Vinnile Thavazhum Madhi


Lyrics:
விண்ணிலே தவழும் மதி
மண்ணில் வரக் கண்டேனே
வண்ணமதில் நானே
மனம் பறிக்கொடுத்தேனே.....(விண்ணிலே)
அன்னப்பெடை நடையையும்
ஆடி வரும் மயிலையும்
பண்பாடும் குயிலையும்
பழித்திடும் காட்சி.......(விண்ணிலே)
செந்தமிழின் இன்பம் போல்
சிந்தையைக் கவர்ந்தது
செம்பொன்னில் உருக்கி வார்த்த
சிற்பம் தானது
சொந்தமுடனே எனைப்
பார்த்துப் பார்த்து சிரித்தது
எந்த நாடும் காணா
எழில் சித்திரமது.....(விண்ணிலே)
இன்பமிகும் காட்சி என்
எதிரில் வந்து நிற்குதே மீண்டும்
எதிரில் வந்து நிற்குதே தம்பி.....
கற்பனையில் காணுதே......என்னை
கற்பனையில் காணுதே.....
இன்பமிகும் காட்சி என் எதிரில் வந்து நிற்குதே
எழிலான கொடிபோன்ற இடையசைக்குதே
கடைக் கண்ணால் பார்த்துப் பேசாமல் பேசுதே
கருத்தினிலே வந்து குடி புகுந்ததே என்
கருத்தினிலே வந்து குடி புகுந்ததே......(விண்ணிலே)

விண்ணிலே தவழும் மதி - Vinnile Thavazhum Madhi Song Lyrics, விண்ணிலே தவழும் மதி - Vinnile Thavazhum Madhi Releasing at 11, Sep 2021 from Album / Movie துளி விசம் - Thuli Visham (1954) Latest Song Lyrics