யோகமிது புது யோகமிது - Yogamithu Pudhu Yogamithu Song Lyrics

யோகமிது புது யோகமிது - Yogamithu Pudhu Yogamithu

யோகமிது புது யோகமிது - Yogamithu Pudhu Yogamithu


Lyrics:
யோகமிது புது யோகமிது
விழியோடு கவி பாடி
ரதியோடு சுகம் தேடும்
யோகமிது புது யோகமிது
நேரமிது சுப நேரமிது
மலரோடை நீராடி
மதனோடு நானாட
நேரமிது சுப நேரமிது...
அந்தி வரும் தென்றலிலே
ஆடி ஒரு சேதி வரும்
உள்ளத்தில் ஆசை வந்து
உன்னையே நாடி வரும்
மன்னவனின் கரங்களிலே
மாலையிடும் வேளைதனில்
கள்ளவிழி பார்வையிலே
புல்லரிக்கும் பொழுதினிலே..(யோகமிது)
சின்னவளின் விழி சிவக்கும்
சீதனங்கள் ஏராளம்
சங்கமத்தில் கோடி சுகம்
சரி பாதி உனதாகும்
புன்னகையில் மின்னலிடும்
பூவிதழில் தேனூறும்
கன்னத்தில் கோலமிடும்
கன்னி எந்தன் சொந்தமடி...(நேரமிது)

யோகமிது புது யோகமிது - Yogamithu Pudhu Yogamithu Song Lyrics, யோகமிது புது யோகமிது - Yogamithu Pudhu Yogamithu Releasing at 11, Sep 2021 from Album / Movie மாப்பிளை சிங்கம் - Mappillai Singam (1983) Latest Song Lyrics