அழகு முகம் மலர்ந்து - Aalagu Mugam Song Lyrics

அழகு முகம் மலர்ந்து - Aalagu Mugam

அழகு முகம் மலர்ந்து - Aalagu Mugam


Lyrics:
அழகு முகம் மலர்ந்து
தாயின் மடி கடந்து
உலகை இரசித்திருக்கும் குழந்தையே
எதிலும் மனம் உடைந்து
வெறுமை என உணர்ந்து
தனிமை ருசித்திருக்கும் முதுமையே
சிலர் வாழ்க்கை
இன்று தொடங்குமே
வரும் நாளை எண்ணி இயங்குமே
நாம் வாழும் வாழ்க்கை
நீண்ட தூரப்பயணமே
அதை வாழ்ந்துப் பார்க்கத்
தூண்டும் நம்மை உலகமே
தினம் ஒவ்வொரு
நொடியிலும் பயணமே
வரும் ஒவ்வொரு
விடியலும் பயணமே
புதியத்தோற்றங்களும்
புதிய மாற்றங்களும்
கனவைத் தருகிறது வாழ்க்கையில்
புதியக்கேள்விகளும
புதியத்தேடல்களும்
முழுமையடைகிறது பூமியில்
இதில் நீயும் நானும் பயணியே
வரும் வாழ்வும் தாழ்வும பயணமே
இது காலந்தோறும் மாறிடாமல் தொடருமே
இதைக்காதலோடு ஏற்கவேண்டும் எவருமே

அழகு முகம் மலர்ந்து - Aalagu Mugam Song Lyrics, அழகு முகம் மலர்ந்து - Aalagu Mugam Releasing at 11, Sep 2021 from Album / Movie பொக்கிஷம் - Pokkisham (2009) Latest Song Lyrics