உலகம் நினைவில் இல்லை - Ulagam Ninaivil Illai Song Lyrics

உலகம் நினைவில் இல்லை - Ulagam Ninaivil Illai

உலகம் நினைவில் இல்லை - Ulagam Ninaivil Illai


Lyrics:
உலகம் நினைவில் இல்லை உறங்க மனமும் இல்லை
முழுதும் அவள் நினைவில் மிதக்கிறேன்
மதிய வெயில் அடித்தும் மனதில் மழைப் பொழிந்த
இனிய மணித்துளியில் குளிக்கிறேன்
கண்ணை மோதும் காற்றில் அவள் முகம்
நெஞ்சை மேயும் பாட்டில் அவள் முகம்
பல கோடி பூக்கள் சேர்ந்துப் பூக்கும் பரவசம்
பல கோடி வீணை சேர்ந்து மீட்டும் அனுபவம்
இது காதலின் அழகியத் தொல்லையா
இதை மீறிட வழிகளும் இல்லையா
இது காதலின் அழகியத் தொல்லையா
இதை மீறிட வழிகளும் இல்லையா
எனது மனக்குகையில் புதிய ஒளி பரவ
புவியில் மறுப்படியும் பிறக்கிறேன்
இமையில் படபடப்பு இதழில் குறுஞ்சிரிப்பு
வளர்ந்த குழந்தையென தவழ்கிறேன்
எனை ஏனோ நானே இழக்கிறேன்
இந்த ஊனை உயிரை துறக்கிறேன்
இந்த காதல் பேயை ஆசையோடு அணைக்கிறேன்
இந்த காதல் பேயை ஆசையோடு அணைக்கிறேன்

உலகம் நினைவில் இல்லை - Ulagam Ninaivil Illai Song Lyrics, உலகம் நினைவில் இல்லை - Ulagam Ninaivil Illai Releasing at 11, Sep 2021 from Album / Movie பொக்கிஷம் - Pokkisham (2009) Latest Song Lyrics