காசு கையில் இல்லாட்டா - Kaasu Enbadhu Song Lyrics

காசு கையில் இல்லாட்டா - Kaasu Enbadhu

காசு கையில் இல்லாட்டா - Kaasu Enbadhu


Lyrics:
காசு கையில் இல்லாட்டா இங்கு எதுவும் இல்லடா
காசு கையில் இல்லாட்டா இங்கு எதுவும் இல்லடா
உன் பேச்சு இங்கு செல்லாது உலகம் கண்டுக்காதுடா
காசு பணம் என்னும் ஒரு வட்டத்திலே
பூமி இது சுத்துதப்பா மொத்தத்திலே
எத்தனையோ ரூபம் உண்டு ரொக்கத்துக்கு
ஏழை மக்கள் வாழ்க்கை மட்டும் துக்கத்துக்கு
அட மதிப்பு கிடைப்பதும் மதிய கெடுப்பதும் பணத்தின் வேலைதான்டா
காசு கையில் இல்லாட்டா இங்கு எதுவும் இல்லடா
உன் பேச்சு இங்கு செல்லாது உலகம் கண்டுக்காதுடா
ஏகப்பட்ட ஆசையுடன் பட்டணத்தை தேடி
சிறகை விரித்து விண்ணில் பறக்க பலர் வந்து போகிறார்
ஆசைபட்ட அத்தனையும் மாறிவிடும் போது
அல்லல் அடைந்து உள்ளம் உடைந்து சிலர் நொந்து போகிறார்
வாழ்க்கை என்பது பயணம் போன்றது
வளைவும் திருப்பமும் வழியை மாற்றுது
புத்தி உள்ளவன் தப்பி பிழைக்கிறான்
சிக்கிக்கொண்டவன் திகைத்து நிற்கிறான்
பட்டு பட்டு படிச்சவன் தான் மற்றவர்க்கு பாடமாகிறான்
காசு கையில் இல்லாட்டா இங்கு எதுவும் இல்லடா
உன் பேச்சு இங்கு செல்லாது உலகம் கண்டுக்காதுடா
எப்படியும் வாழ்க்கையிலே வெற்றி பெற எண்ணி
எந்த தொழிலும் செய்ய நினைத்து சில உள்ளம் அலையுது
ஆயிரத்தில் ஒன்று மட்டும் எண்ணியது போல
வெற்றி படியை எட்டி பிடித்து கொடி நாட்டி செல்லுது
கனவு காணவே பலரும் சொல்கிறார்
கனவு மட்டுமே இளைஞர் காண்கிறார்
திறமை இன்றியே கனவு காண்பவன்
கானல் நீரிலே மீனுக்கலைபவன்
ஆசைக்கொரு எல்லை வச்சு அறிவுக்கு வேலை கோடுடா
காசு கையில் இல்லாட்டா இங்கு எதுவும் இல்லடா
உன் பேச்சு இங்கு செல்லாது உலகம் கண்டுக்காதுடா
காசு பணம் என்னும் ஒரு வட்டத்திலே
பூமி இது சுத்துதப்பா மொத்தத்திலே
எத்தனையோ ரூபம் உண்டு ரொக்கத்துக்கு
ஏழை மக்கள் வாழ்க்கை மட்டும் துக்கத்துக்கு
அட மதிப்பு கிடைப்பதும் மதிய கெடுப்பதும் பணத்தின் வேலைதான்டா
காசு கையில் இல்லாட்டா இங்கு எதுவும் இல்லடா
உன் பேச்சு இங்கு செல்லாது உலகம் கண்டுக்காதுடா

காசு கையில் இல்லாட்டா - Kaasu Enbadhu Song Lyrics, காசு கையில் இல்லாட்டா - Kaasu Enbadhu Releasing at 11, Sep 2021 from Album / Movie மாயக் கண்ணாடி - Maya Kannadi (1994) Latest Song Lyrics