காட்டுக்குள்ளே திருவிழா - Kaatukkulle Thiruvizha Song Lyrics

காட்டுக்குள்ளே திருவிழா - Kaatukkulle Thiruvizha

காட்டுக்குள்ளே திருவிழா - Kaatukkulle Thiruvizha


Lyrics:
காட்டுக்குள்ளே திருவிழா கன்னிப்பொண்ணு மணவிழா
சிரிக்கும் மலர்கள் தூவி சிங்காரிக்கும் பொன்விழா
காட்டுக்குள்ளே திருவிழா கன்னிப்பொண்ணு மணவிழா
சிரிக்கும் மலர்கள் தூவி சிங்காரிக்கும் பொன்விழா ஹோய்
ஓஹோஹோ ஹோய்சலசலக்கும் அருவியக்கா மலையிலே தாவி
சதிராட்டம் போடுகிறாள் தரையிலே
சலசலக்கும் அருவியக்கா மலையிலே தாவி
சதிராட்டம் போடுகிறாள் தரையிலே
கலகலக்கும் இயற்கையம்மா மடியிலே
கலகலக்கும் இயற்கையம்மா மடியிலே அவள்
கண்மயங்கி ஓடுகின்றாள் வழியிலே அவள்
கண்மயங்கி ஓடுகின்றாள் வழியிலே
காட்டுக்குள்ளே திருவிழா கன்னிப்பொண்ணு மணவிழா
சிரிக்கும் மலர்கள் தூவி சிங்காரிக்கும் பொன்விழா ஹோய்
ஓஹோஹோ ஹோய்
தென்றலெனும் குதிரையிலே ஊர்வலமாம் மான்கள்
சீர்வரிசை தாங்கி வரும் வாகனமாம்
தென்றலெனும் குதிரையிலே ஊர்வலமாம் மான்கள்
சீர்வரிசை தாங்கி வரும் வாகனமாம்
மங்களமாய் மூங்கிலிலே நாயனமாம்
மங்களமாய் மூங்கிலிலே நாயனமாம் பச்சை
வாழையுடன் மாவிலையும் தோரணமாம் பச்சை
வாழையுடன் மாவிலையும் தோரணமாம்
காட்டுக்குள்ளே திருவிழா கன்னிப்பொண்ணு மணவிழா
சிரிக்கும் மலர்கள் தூவி சிங்காரிக்கும் பொன்விழா ஹோய்
ஓஹோஹோ ஹோய்
வாசலிலே வருகவென்பாள் குயிலம்மா அங்கே
வந்தவரை அமர்கவென்பாள் கிளியம்மா
வாசலிலே வருகவென்பாள் குயிலம்மா அங்கே
வந்தவரை அமர்கவென்பாள் கிளியம்மா
ஆசையுடன் நடமிடுவாள் மயிலம்மா
ஆசையுடன் நடமிடுவாள் மயிலம்மா இந்த
அழகு கண்டால் தூக்கம் கூடத் தோன்றுமா? இந்த
அழகு கண்டால் தூக்கம் கூடத் தோன்றுமா?
காட்டுக்குள்ளே திருவிழா கன்னிப்பொண்ணு மணவிழா
சிரிக்கும் மலர்கள் தூவி சிங்காரிக்கும் பொன்விழா
காட்டுக்குள்ளே திருவிழா கன்னிப்பொண்ணு மணவிழா
சிரிக்கும் மலர்கள் தூவி சிங்காரிக்கும் பொன்விழா ஹோய்
ஓஹோஹோ ஹோய்

காட்டுக்குள்ளே திருவிழா - Kaatukkulle Thiruvizha Song Lyrics, காட்டுக்குள்ளே திருவிழா - Kaatukkulle Thiruvizha Releasing at 11, Sep 2021 from Album / Movie தாய் சொல்லைத் தட்டாதே - Thaai Sollai Thattadhe (1961) Latest Song Lyrics