கேள்வி ரெண்டு கிடக்குதிங்கே விடை தெரியாமல் - Kelvi Rendu Kidakku Song Lyrics

கேள்வி ரெண்டு கிடக்குதிங்கே விடை தெரியாமல் - Kelvi Rendu Kidakku
Artist: Dr. Balamuralikrishna ,
Album/Movie: தலைவனுக்கோர் தலைவி - Thalaivanukkor Thalaivi (1989)
Lyrics:
கேள்வி ரெண்டு கிடக்குதிங்கே விடை தெரியாமல்
சின்னக் கிளிகள் ரெண்டு தவிக்குதிங்கே திசை புரியாமல்

இது விடிவில்லாத கிழக்கா ஒரு முடிவில்லாத வழக்கா
தலைவனுக்கோர் தலைவியென்னும் தத்துவத்தைக் கண்டு
தன் தேசம் விட்டு தேசம் வந்த தோகை மயில் ஒன்று
வேடந்தாங்கல் என நினைத்த வீட்டினிலே இன்று
ஒரு வேடன் வந்து வில்லெடுக்க வாடுதம்மா நின்று
இது விடிவில்லாத கிழக்கா ஒரு முடிவில்லாத வழக்கா...
பெற்றவர்கள் பெரியவர்கள் பார்த்து வைத்த பொருத்தம்
பூ முடித்த பாவைக்கும்தான் நேர்ந்ததம்மா வருத்தம்
தாரம் விட்டு வேறொருவன் தாரத்தின் மேல் சபலம் வைத்த
தலைவனுடன் வாழ்வது தான் தாங்கவொண்ணா நரகம்

யார் யார்க்கு வாய்ப்பதென்ன யாரறிவார் இங்கே
அவன் போட்ட கணக்கு என்றால் போட்டவன்தான் எங்கே
நதி வழியே [போனால்தான் கரை சேரும் ஓடம்
விதி வழியே போகுமென்றால் வழி மாறக் கூடும்

கேள்வி ரெண்டு கிடக்குதிங்கே விடை தெரியாமல் - Kelvi Rendu Kidakku Song Lyrics, கேள்வி ரெண்டு கிடக்குதிங்கே விடை தெரியாமல் - Kelvi Rendu Kidakku Releasing at 11, Sep 2021 from Album / Movie தலைவனுக்கோர் தலைவி - Thalaivanukkor Thalaivi (1989) Latest Song Lyrics