நீயும் பொம்மை - Neeyum Bommai Song Lyrics

நீயும் பொம்மை - Neeyum Bommai
Artist: K. J. Yesudas ,
Album/Movie: மூடர் கூட்டம் - Moodar Koodam (2013)
Lyrics:
நீயும் பொம்மை நானும் பொம்மை
நெனச்சு பாத்தா எல்லாம் பொம்மை
தாயின் மடியில் பிள்ளையும் பொம்மை
தலைவன் முன்னே தொண்டனும் பொம்மை
கோயிலில் வாழும் தெய்வமும் பொம்மை
அதை கும்பிடும் மனிதர் யாவரும் பொம்மை
நீயும் பொம்மை நானும் பொம்மை
நெனச்சு பாத்தா எல்லாம் பொம்மை
வல்லவன் கையில் நல்லவன் பொம்மை
உள்ளவன் முன் இல்லாதவன் பொம்மை
வல்லவன் கையில் நல்லவன் பொம்மை
உள்ளவன் முன் இல்லாதவன் பொம்மை
அல்லும் பகலும் உழைப்பவன் பொம்மை
தினம் அல்லல் பட்டு அலைபவன் பொம்மை
அன்பின் அணைப்பில் அனைவரும் பொம்மை
ஆசை வார்த்தையில் அறிவும் பொம்மை
அன்பின் அணைப்பில் அனைவரும் பொம்மை
ஆசை வார்த்தையில் அறிவும் பொம்மை
இன்ப சோலையில் இயற்கை பொம்மை
அந்த இயற்கை அமைப்பில் எதுவுமே பொம்மை
நீயும் பொம்மை நானும் பொம்மை
நெனச்சு பாத்தா எல்லாம் பொம்மை
விதியின் பார்வையில் உயிர்கள் பொம்மை
வீசும் புயலில் உலகமே பொம்மை
நதியின் முன்னே தர்மமும் பொம்மை
வரும் சாவின் பிடியில் வாழ்வும் பொம்மை
நீயும் பொம்மை நானும் பொம்மை
நெனச்சு பாத்தா எல்லாம் பொம்மை
தாயின் மடியில் பிள்ளையும் பொம்மை
தலைவன் முன்னே தொண்டனும் பொம்மை
கோயிலில் வாழும் தெய்வமும் பொம்மை
அதை கும்பிடும் மனிதர் யாவரும் பொம்மை
நீயும் பொம்மை நானும் பொம்மை
நெனச்சு பாத்தா எல்லாம் பொம்மை
வல்லவன் கையில் நல்லவன் பொம்மை
உள்ளவன் முன் இல்லாதவன் பொம்மை
வல்லவன் கையில் நல்லவன் பொம்மை
உள்ளவன் முன் இல்லாதவன் பொம்மை
அல்லும் பகலும் உழைப்பவன் பொம்மை
தினம் அல்லல் பட்டு அலைபவன் பொம்மை
அன்பின் அணைப்பில் அனைவரும் பொம்மை
ஆசை வார்த்தையில் அறிவும் பொம்மை
அன்பின் அணைப்பில் அனைவரும் பொம்மை
ஆசை வார்த்தையில் அறிவும் பொம்மை
இன்ப சோலையில் இயற்கை பொம்மை
அந்த இயற்கை அமைப்பில் எதுவுமே பொம்மை
நீயும் பொம்மை நானும் பொம்மை
நெனச்சு பாத்தா எல்லாம் பொம்மை
விதியின் பார்வையில் உயிர்கள் பொம்மை
வீசும் புயலில் உலகமே பொம்மை
நதியின் முன்னே தர்மமும் பொம்மை
வரும் சாவின் பிடியில் வாழ்வும் பொம்மை
Releted Songs
நீயும் பொம்மை - Neeyum Bommai Song Lyrics, நீயும் பொம்மை - Neeyum Bommai Releasing at 11, Sep 2021 from Album / Movie மூடர் கூட்டம் - Moodar Koodam (2013) Latest Song Lyrics