நீயும் நானும் ஒன்று - Neeyum Naanum Ondru Song Lyrics

நீயும் நானும் ஒன்று - Neeyum Naanum Ondru

நீயும் நானும் ஒன்று - Neeyum Naanum Ondru


Lyrics:
நீயும் நானும் ஒன்று -
ஒருநிலையில் பார்த்தால் இன்று
நீயும் நானும் ஒன்று -
ஒருநிலையில் பார்த்தால் இன்று
அழகை உனக்கு கொடுத்த இறைவன்
அறிவில் மயக்கம் கொடுத்து விட்டான்
விழியை எனக்கு கொடுத்த இறைவன்
வழியைக் காட்ட மறுத்து விட்டான்
நீயும் நானும் ஒன்று -
ஒருநிலையில் பார்த்தால் இன்று
எங்கு பிறந்தோம் எங்கு வளர்ந்தோம்
என்பதுனக்கும் தெரியவில்லை
எதற்குப் பிறந்தோம் எதற்கு வளர்ந்தோம்
என்பதெனக்கும் புரியவில்லை
நீயும் நானும் ஒன்று -
ஒருநிலையில் பார்த்தால் இன்று
உறவுமில்லை பகையுமில்லை
உயர்வும் தாழ்வும் உனக்கில்லை
இரவுமில்லை பகலும் இல்லை
எதுவும் உலகில் எனக்கில்லை
நீயும் நானும் ஒன்று -
ஒருநிலையில் பார்த்தால் இன்று

நீயும் நானும் ஒன்று - Neeyum Naanum Ondru Song Lyrics, நீயும் நானும் ஒன்று - Neeyum Naanum Ondru Releasing at 11, Sep 2021 from Album / Movie கொடுத்து வைத்தவள் - Koduthu Vaithaval (1963) Latest Song Lyrics