சங்கே முழங்கு - Sange Muzhangu Song Lyrics

சங்கே முழங்கு - Sange Muzhangu

சங்கே முழங்கு - Sange Muzhangu


Lyrics:
சங்கே முழங்கு சங்கே முழங்கு
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழ் என்று
சங்கே முழங்கு சங்கே முழங்கு
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டு
பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால்
பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால்
சங்காரம் நிசமென்று சங்கே முழங்கு
சங்கே முழங்கு சங்கே முழங்கு
சங்கே முழங்கு
திங்களோடும் செழும் பருதி தன்னோடும்
விண்ணோடும் உடுக்களோடும்
மங்கு கடல் இவற்றோடும்
பிறந்த தமிழுடன் பிறந்தோம் நாங்கள்
தமிழுடன் பிறந்தோம் நாங்கள்
ஆண்மை சிங்கத்தின் கூட்டமென்றும்
சிறியோர்க்கு ஞாபகம் செய் முழங்கு
சங்கே சங்கே முழங்கு
வெங்க்கொடுமை சாக்காட்டில் விளையாடும் தோள்
எங்கள்வெற்றித் தோள்கள்
கங்கையைப் போல் காவிரிப் போல்
கருத்துக்கள் ஊரும் உள்ளம் எங்கள் உள்ளம்
வெங்குருதி தனில் கமழ்ந்து
வீரம் செய்கின்ற தமிழ் எங்கள்
மூச்சாம் தமிழ் எங்கள் மூச்சாம்

சங்கே முழங்கு - Sange Muzhangu Song Lyrics, சங்கே முழங்கு - Sange Muzhangu Releasing at 11, Sep 2021 from Album / Movie கலங்கரை விளக்கம் - Kalangarai Vilakkam (1965) Latest Song Lyrics