இதயம் செந்தீ விழுந்த - Senthee Vizluntha Song Lyrics

Lyrics:
செந்தீ விழுந்த செம்பொற் பாறையில்
மந்தி உருட்டும் மயிலின் முட்டையாய்
இதயம்
உடலில் இருந்து விழுந்து
உருண்டு புரண்டு போகுதே
நல்ல மரத்தின் நறுங்கிளை யிழிந்து
வெள்ளச் சுழியில் விழுந்து மலராய்...
இதயம்
கரைகள் மறந்து
திசைகள் தொலைந்து அலைந்து போகுதே
சிறுகோட்டுப் பெரும்பழம் தூங்கி யாங்கு
என் உயிரோ சிறிதே
காதலோ பெரிதே
பூப்பது மறந்தன கொடிகள்
புன்னகை மறந்தது மின்னல்
காய்ப்பது மறந்தது காடு
காவியம் மறந்தது ஏடு
யானோ நின்னை மறக்கிலேன்
செந்தமிழ் பிரியும் சங்கம்
செங்கடல் பிரியும் அலைகள்
ஒலியைப் பிரியும் காற்று
உளியைப் பிரியும் சிற்பம்
யானோ நின்னைப் பிரிகிலேன்
வாய் மொட்டுடைந்தால்
பூவாசம் வாசத்துக்கேது சிறைவாசம்.?
செந்தீ விழுந்த செம்பொற் பாறையில்
மந்தி உருட்டும் மயிலின் முட்டையாய்
இதயம்
உடலில் இருந்து விழுந்து
உருண்டு புரண்டு போகுதே
நல்ல மரத்தின் நறுங்கிளை யிழிந்து
வெள்ளச் சுழியில் விழுந்து மலராய்...
இதயம்
கரைகள் மறந்து
திசைகள் தொலைந்து அலைந்து போகுதே
சிறுகோட்டுப் பெரும்பழம் தூங்கி யாங்கு
என் உயிரோ சிறிதே
காதலோ பெரிதே
பூப்பது மறந்தன கொடிகள்
புன்னகை மறந்தது மின்னல்
காய்ப்பது மறந்தது காடு
காவியம் மறந்தது ஏடு
யானோ நின்னை மறக்கிலேன்
செந்தமிழ் பிரியும் சங்கம்
செங்கடல் பிரியும் அலைகள்
ஒலியைப் பிரியும் காற்று
உளியைப் பிரியும் சிற்பம்
யானோ நின்னைப் பிரிகிலேன்
வாய் மொட்டுடைந்தால்
பூவாசம் வாசத்துக்கேது சிறைவாசம்.?
Releted Songs
இதயம் செந்தீ விழுந்த - Senthee Vizluntha Song Lyrics, இதயம் செந்தீ விழுந்த - Senthee Vizluntha Releasing at 11, Sep 2021 from Album / Movie கோச்சடையான் - Kochadaiyaan (2014) Latest Song Lyrics