சுடும் நிலவு சுடாத சூரியன் - Sudum Nilavu Song Lyrics

சுடும் நிலவு சுடாத சூரியன் - Sudum Nilavu

சுடும் நிலவு சுடாத சூரியன் - Sudum Nilavu


Lyrics:
ஆண் : சுடும் நிலவு
சுடாத சூரியன் ஓடும்
நிமிஷம் உறையும்
வருஷம்
{ எல்லாம் எல்லாம்
எல்லாம் வேண்டுமா } (2)
பெண் : { காதலித்துப் பார்
காதலித்துப் பார் } (2)
ஆண் : சுடும் நிலவு
சுடாத சூரியன் ஓடும்
நிமிஷம் உறையும்
வருஷம்
ஆண் : இமையடித்தாலும்
இதயம் வலிக்கும் வலிகளில்
கூட வாசனை இருக்கும்
பெண் : { காதலித்துப் பார்
காதலித்துப் பார் } (2)
பெண் : நரம்புக்கு நடுவே
நதிகள் நகரும் நதியிருந்தாலும்
நாவே உலரும்
ஆண் : தப்பு எல்லாம்
கணிதமாகும் தவறு
எல்லாம் புனிதமாகும்
பெண் : பச்சைத் தண்ணீர்
வெப்பமாகும் எச்சில்
பண்டம் அமிர்தமாகும்
ஆண் : நாக்கு உதடு பேசும்
வார்த்தை முத்தமாகும்
பெண் : சுடும் நிலவு
சுடாத சூரியன் ஓடும்
நிமிஷம் உறையும்
வருஷம்
பெண் : ……………………….
ஆண் : ……………………….
பெண் : மழைத்துளி நமக்கு
சமுத்திரமாகும் சமுத்திரம்
எல்லாம் துளியாய்ப் போகும்
பெண் : { காதலித்துப் பார்
காதலித்துப் பார் } (2)
ஆண் : சத்தியக் காதல்
என்னவும் செய்யும்
சந்திர ஒளியை
ஆடையாய் நெய்யும்
பெண் : தொட்ட பாகம்
மோட்சமாகும் மத்த
பாகம் காய்ச்சலாகும்
ஆண் : தெய்வம் தேய்ந்து
மிருகமாகும் மிருகம் தூங்கி
தெய்வமாகும்
பெண் : தேடல் ஒன்றே
வாழ்க்கை என்று தெரிந்து
போகும்
பெண் : { காதலித்துப் பார்
காதலித்துப் பார் } (2)

சுடும் நிலவு சுடாத சூரியன் - Sudum Nilavu Song Lyrics, சுடும் நிலவு சுடாத சூரியன் - Sudum Nilavu Releasing at 11, Sep 2021 from Album / Movie தம்பி - Thambi (2006) Latest Song Lyrics