ரத கஜ துரக பதாதிகள் - Veeram Song Lyrics

ரத கஜ துரக பதாதிகள் - Veeram

ரத கஜ துரக பதாதிகள் - Veeram


Lyrics:
ரத கஜ துரக பதாதிகள் எதிர்ப்பினும்
அதகளம் புரிந்திடும் வீரம்
இவன் மத புஜம் இரண்டும் மலையென எழுந்திட
செருகளம் சிதறிடும் வீரம்
சக மனிதன் ஒரு துயரெனக் கசிந்ததும்
அகம் பதறி எழும் வீரம்
துகளளவும் பகை புகலிங்கு தவறெனக்
காப்பரணாய் நிற்கும் வீரம்
தனி அரிமா போல எந்தத் தருணமும்
தாக்கிடும் பெரும் வீரம்
ரத கஜ துரக பதாதிகள் எதிர்ப்பினும்
அதகளம் புரிந்திடும் வீரம்
இவன் மத புஜம் இரண்டும் மலையென எழுந்திட
செருகளம் சிதறிடும் வீரம்
சிகை தொட நினைத்தவன்
சிரம் விழும் தரையினில்
ஈடிணையில்லா வீரம்
பல திசைகளும் திகைத்திடும்
பார்ப்பவை பதைத்திடும்
சரித்திரம் வியந்திடும் வீரம்
எரிதழலாய் நின்று
எதிரிகள் அலறிட
சமரினில் திமிறிடும் வீரம்
பயம் எனும் சொல்லிங்கு பரிச்சயம் இலையென
பரம் பொருள் வரம் தந்த வீரம்
கடும் புனலே மோத வரும் வேளையில்
களிப்புறும் தனி வீரம்
ரத கஜ துரக பதாதிகள் எதிர்ப்பினும்
அதகளம் புரிந்திடும் வீரம்
இவன் மத புஜம் இரண்டும் மலையென எழுந்திட
செருகளம் சிதறிடும் வீரம்

ரத கஜ துரக பதாதிகள் - Veeram Song Lyrics, ரத கஜ துரக பதாதிகள் - Veeram Releasing at 11, Sep 2021 from Album / Movie வீரம் - Veeram (2014) Latest Song Lyrics