மகாராஜன் உலகை - Maharajan Song Lyrics

மகாராஜன் உலகை - Maharajan
Artist: P. Susheela ,T. M. Soundararajan ,
Album/Movie: கர்ணன் - Karnan (1964)
Lyrics:
மகாராஜன் உலகை ஆளலாம்
இந்த மகாராணி அவனை ஆளுவாள்... ஆ... ஆ...
மகாராஜன் உலகை ஆளலாம்
புலவர் பாட அரசர் கூட அறிஞர் நாட வாழலாம்
புதுமை கூறும் மனைவி கண்ணில்
உலக இன்பம் காணலாம்
மகாராணி அவனை ஆளுவாள்
அதில் மகாராஜன் மயங்கியாடுவான்... ஆ... ஆ...
மகாராணி அவனை ஆளுவாள்
புலவர் பாட அரசர் கூட அறிஞர் நாட வாழுவார்
புதுமை கூறும் மனைவி கண்ணில்
உலக இன்பம் காணுவார்
உலக இன்பம் காணுவார்
மகாராணி அவனை ஆளுவாள்
நான்கு பக்கம் திரைகளாடும்
பாமலர் மஞ்சம் அதன்
நடுவினிலே குடை பிடிக்கும் காதலர் நெஞ்சம்
மான் கொடுத்த சாயலங்கே
மயங்கிடும் கொஞ்சம் அந்த
மயக்கத்திலே தலைவியிடம் தலைவனே தஞ்சம்
பாதத்தில் முகமிருக்கும்
பார்வை இறங்கி வரும்
மேகத்தில் லயித்திருக்கும்
வீரமும் களைத்திருக்கும்
இருவர் ஆ... ஆ... ஆ... ஆ...
மகாராஜன் உலகை ஆளலாம்
கண்ணனையும் அந்தயிடம் கலக்கவில்லையா
இந்த கர்ணனுக்கு மட்டும் என்ன இதயமில்லையா
வள்ளலுக்கு வள்ளல் இந்த
பெண்மை இல்லையா எந்த
மன்னவர்க்கும் வழங்குவது மனைவியில்லையா
அள்ளி அள்ளி கொடுத்திருக்கும்
அந்தி பகல் துணையிருக்கும்
ஆண் உண்ண உண்ண வளர்ந்திருக்கும்
உலகமே மறந்திருக்கும்
இருவர் ஆ... ஆ... ஆ... ஆ...
மகாராஜன் உலகை ஆளலாம்
மகாராஜன் உலகை ஆளலாம்
இந்த மகாராணி அவனை ஆளுவாள்... ஆ... ஆ...
மகாராஜன் உலகை ஆளலாம்
புலவர் பாட அரசர் கூட அறிஞர் நாட வாழலாம்
புதுமை கூறும் மனைவி கண்ணில்
உலக இன்பம் காணலாம்
மகாராணி அவனை ஆளுவாள்
அதில் மகாராஜன் மயங்கியாடுவான்... ஆ... ஆ...
மகாராணி அவனை ஆளுவாள்
புலவர் பாட அரசர் கூட அறிஞர் நாட வாழுவார்
புதுமை கூறும் மனைவி கண்ணில்
உலக இன்பம் காணுவார்
உலக இன்பம் காணுவார்
மகாராணி அவனை ஆளுவாள்
நான்கு பக்கம் திரைகளாடும்
பாமலர் மஞ்சம் அதன்
நடுவினிலே குடை பிடிக்கும் காதலர் நெஞ்சம்
மான் கொடுத்த சாயலங்கே
மயங்கிடும் கொஞ்சம் அந்த
மயக்கத்திலே தலைவியிடம் தலைவனே தஞ்சம்
பாதத்தில் முகமிருக்கும்
பார்வை இறங்கி வரும்
மேகத்தில் லயித்திருக்கும்
வீரமும் களைத்திருக்கும்
இருவர் ஆ... ஆ... ஆ... ஆ...
மகாராஜன் உலகை ஆளலாம்
கண்ணனையும் அந்தயிடம் கலக்கவில்லையா
இந்த கர்ணனுக்கு மட்டும் என்ன இதயமில்லையா
வள்ளலுக்கு வள்ளல் இந்த
பெண்மை இல்லையா எந்த
மன்னவர்க்கும் வழங்குவது மனைவியில்லையா
அள்ளி அள்ளி கொடுத்திருக்கும்
அந்தி பகல் துணையிருக்கும்
ஆண் உண்ண உண்ண வளர்ந்திருக்கும்
உலகமே மறந்திருக்கும்
இருவர் ஆ... ஆ... ஆ... ஆ...
மகாராஜன் உலகை ஆளலாம்
Releted Songs
மகாராஜன் உலகை - Maharajan Song Lyrics, மகாராஜன் உலகை - Maharajan Releasing at 11, Sep 2021 from Album / Movie கர்ணன் - Karnan (1964) Latest Song Lyrics