விழுவதும் எழுவதும் - Vizhuvathum Ezhuvathum Song Lyrics

விழுவதும் எழுவதும் - Vizhuvathum Ezhuvathum

விழுவதும் எழுவதும் - Vizhuvathum Ezhuvathum


Lyrics:
விழுவதும் எழுவதும்
தானடா வாழ்கையே
எழும்வரை இதயத்தில்
வேண்டுமே வேட்கையே
வழித்துணையாய் இவள் நேசம்தான்
போதும் போதுமே
விழிகளின் ஓரத்து ஈரங்கள்
காய்ந்து போகுமே
உறங்கிட ஒரு மடி இருக்கிறது
என்றுமே
உனக்கென அனுதினம் துடிக்கிறது
நெஞ்சமே
கூடையில் கூடையில்
தூவிடும் மேகம் போல
கூடவே கூடவே
தேவதை நிழல் வரும்
ராத்திரி பாதையில்
வீசிடும் வெளிச்சம் போல
காதலன் காவலன்
ஆறுதல் வழி தரும்
விழுவதும் எழுவதும்
தானடா வாழ்கையே
எழும்வரை இதயத்தில்
வேண்டுமே வேட்கையே
எரிமலை தெறிப்பென சீறிவா
சாம்பல் ஆக்கலாம்
எதிரியின் படைகளை தீரமாய் மோதி
சாய்க்கலாம்
சரித்திரம் முழுவதும்
ஜெயித்தவர்கள் யாரடா
தடைகளை துரும்பென
மதித்தவர்கள் தானடா
சூறையாய் மோதியே
போரிலே வாகை சூடு
ஏளனம் செய்தவர்
பார்த்திட பதில் கொடு
கைகளே ஆயுதம்
காலத்தை சொந்தம் ஆக்கு
நானிலம் தாண்டியும்
அஞ்சிட நடந்திடு
விழுவதும் எழுவதும்
தானடா வாழ்கையே
எழும்வரை இதயத்தில்
வேண்டுமே வேட்கையே

விழுவதும் எழுவதும் - Vizhuvathum Ezhuvathum Song Lyrics, விழுவதும் எழுவதும் - Vizhuvathum Ezhuvathum Releasing at 11, Sep 2021 from Album / Movie பொன்மாணிக்க வேல் - Pon Manickavel (2019) Latest Song Lyrics