நான் வாக்கப்பட்டு - Naan Vaakkapattu Song Lyrics

நான் வாக்கப்பட்டு - Naan Vaakkapattu

நான் வாக்கப்பட்டு - Naan Vaakkapattu

Lyrics:
நான் வாக்கப்பட்டு போகப்போற ஊர பத்தி கேளு
அடி நாலு பக்கம் தென்னந்தோப்பு தோப்புக்குள்ள வீடு
நான் வாக்கப்பட்டு போகப்போற ஊர பத்தி கேளு
அடி நாலு பக்கம் தென்னந்தோப்பு தோப்புக்குள்ள வீடு
ஏ அன்னக்கிளியே அடி சொர்ணக்கிளியே அத கேட்டுக்க நீ
நான் வாக்கப்பட்டு போகப்போற ஊர பத்தி கேளு
துள்ளும் குத்தால காத்து வந்து குடியிருக்குமடி
அங்கு வைகாசி கூட இளங்குளிரடிக்குமடி
நான் வாக்கப்பட்டு போகப்போற ஊர பத்தி கேளு
அடி நாலு பக்கம் தென்னந்தோப்பு தோப்புக்குள்ள வீடு
என் போல ஆறு ஒன்னு துள்ளி துள்ளி நடக்கும்
அடி ஆத்தி அம்மா இன்னும் கொஞ்சம் மேல சொல்லு
பூ போல மேகம் ஒன்னு சாரல் மழை தெளிக்கும்
காவேரி குட்டி நல்ல கதை இன்னமும் சொல்லு
புன்னை மரப்பொந்துக்குள்ள பச்சக்கிளி கொஞ்சயில
கேக்கும் காதல் பேச்சு அத கேட்டா மனசே போச்சு
மாம்பூவின் வாசம் வரும் மண்ணோட நேசம் வரும்
சொன்னா அதுதான் தீராது
அட இன்னமும் சொல்லுறேன் கேட்டுக்கோ
நான் சொன்னத பின்னால பாத்துக்கோ
பொண்ணா நான் போகையில வேடிக்கை நீ பாக்க வா
நான் வாக்கப்பட்டு போகப்போற ஊர பத்தி கேளு
அடி நாலு பக்கம் தென்னந்தோப்பு தோப்புக்குள்ள வீடு
நான் போகும் சீமையில நாலு போகம் விளையும்
அட காத குடுத்தா எட்டு முழம் பூவ சுத்துவா
நான் கை தூவி போட்ட விதை மச்சு வந்து நெறையும்
கொஞ்சம் கண்ணு அசந்தா ரொம்ப ரொம்ப ரீல சுத்துவா
மஞ்சுக்கிங்க பஞ்சம் இல்ல பஞ்சத்தில யாரும் இல்ல
ராகம் பாடும் காத்து மெல்ல தாளம் போடும் நாத்து
மேற்கால வைகை அணை யானை மலை தேனீ சுனை
பார்க்க பார்க்க திகட்டாது
அட நண்டு நடக்குற இடத்தில் செந்நாரை பறக்குற இடத்தில்
நான் வாழ்வேனே வாக்கப்பட்டு வேடிக்கை நீ பார்க்க வா
நான் வாக்கப்பட்டு போகப்போற ஊர பத்தி கேளு
அடி நாலு பக்கம் தென்னந்தோப்பு தோப்புக்குள்ள வீடு
ஏ அன்னக்கிளியே அடி சொர்ணக்கிளியே அத கேட்டுக்க நீ
வாக்கப்பட்டு போகப்போற ஊர பத்தி கேளு
துள்ளும் குத்தால காத்து வந்து குடியிருக்குமடி
அங்கு வைகாசி கூட இளங்குளிரடிக்குமடி
நான் வாக்கப்பட்டு போகப்போற ஊர பத்தி கேளு
அடி நாலு பக்கம் தென்னந்தோப்பு தோப்புக்குள்ள வீடு

நான் வாக்கப்பட்டு - Naan Vaakkapattu Song Lyrics, நான் வாக்கப்பட்டு - Naan Vaakkapattu Releasing at 11, Sep 2021 from Album / Movie தேசிய கீதம் - Desiya Geetham (1998) Latest Song Lyrics