ஒருத்தி மகனாய்ப் - Oruthi Maganai Song Lyrics

ஒருத்தி மகனாய்ப் - Oruthi Maganai

ஒருத்தி மகனாய்ப் - Oruthi Maganai


Lyrics:
ஒருத்தி மகனாய்ப் பிறந்தவனாம்
உருவில் அழகாய் வளர்ந்தவனாம்
ஒருத்தி மனதில் நிறைந்தவனாம்
உயிரில் உயிராய்க் கலந்தவனாம்ஒருத்தி மகனாய்ப் பிறந்தவனாம்
உருவில் அழகாய் வளர்ந்தவனாம்
ஒருத்தி மனதில் நிறைந்தவனாம்
உயிரில் உயிராய்க் கலந்தவனாம்
உலகத்தின் ரகசியம் அறிந்தவனாம்
உள்ளத்தின் கதைகள் தெரிந்தவனாம்
உலகத்தின் ரகசியம் அறிந்தவனாம்
உள்ளத்தின் கதைகள் தெரிந்தவனாம்
பழகும் விதமும் புரிந்தவனாம்
பார்க்கும் பார்வையில் தெளிந்தவனாம்
பழகும் விதமும் புரிந்தவனாம்
பார்க்கும் பார்வையில் தெளிந்தவனாம்
ஆஹா ஒஹோ ம்ம்ம்ம்ம்
ஒருத்தி மகனாய்ப் பிறந்தவனாம்
உருவில் அழகாய் வளர்ந்தவனாம்
ஒருத்தி மனதில் நிறைந்தவனாம்
உயிரில் உயிராய்க் கலந்தவனாம்
இளையவள் முகத்தைப் பார்த்தானாம்
இதயத்தை அவளிடம் கொடுத்தானாம்
இளையவள் முகத்தைப் பார்த்தானாம்
இதயத்தை அவளிடம் கொடுத்தானாம்
அழகியை அருகினில் அழைத்தானாம்
ஆசையில் அவளை அணைத்தானாம்
அழகியை அருகினில் அழைத்தானாம்
ஆசையில் அவளை அணைத்தானாம்
ஆஹா ஒஹோ ம்ம்ம்ம்ம்
சாத்திரம் சரித்திரம் படித்தவனாம்
தவறு செய்பவரைப் பிடிப்பவனாம்
ராத்திரி பகலாய் அலைவானாம்
ரகசியக் கோவில் சேவகனாம்
ஒருத்தி மகனாய்ப் பிறந்தவனாம்
உருவில் அழகாய் வளர்ந்தவனாம்
ஒருத்தி மனதில் நிறைந்தவனாம்
உயிரில் உயிராய்க் கலந்தவனாம்

ஒருத்தி மகனாய்ப் - Oruthi Maganai Song Lyrics, ஒருத்தி மகனாய்ப் - Oruthi Maganai Releasing at 11, Sep 2021 from Album / Movie தாய் சொல்லைத் தட்டாதே - Thaai Sollai Thattadhe (1961) Latest Song Lyrics